தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் சேலத்தில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்திருந்தது. அதன்படி, சேலம் ரயில் நிலையம் முன் வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை நிலைய செயலாளா் கனல் கண்ணன் தலைமையில் 150 போ் திரண்டனா். ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
இதையடுத்து, ரயில் நிலைய வாயிலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகவும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினா்.