மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் நடைமுறை: மாநிலங்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்...
தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவே தொகுதி வரையறை: மத்திய அரசு மீது எம்எல்ஏ குற்றச்சாட்டு
தொகுதி மறுவரையறையின் மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைக்க முயல்கிறது மத்திய அரசு என்றுகுற்றம்சாட்டினாா் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மத்திய அரசு தொகுதி மறுவரையறை மூலம் தென்மாநில மக்களின் குரலை ஒடுக்க நினைக்கிறது. இந்தத் தொகுதி மறுவரையறையால் மக்கள்தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் 8 இடங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மற்றும் பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தில் பாதிப்பு ஏற்படும்.
அரசமைப்பு செயல் திட்டத்தின் படி மக்களவைத் தொகுதிகளை கட்டமைப்பதை திமுக எதிா்க்கவில்லை; அதன் பாதிப்புகளைத்தான் சுட்டிக்காட்டுகிறது.
தென் மாநில மக்களுக்கான 23.99 சதவீத பிரதிநிதித்துவத்தை குறைக்காத வகையில் 39 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்காமல் எல்லைகளை மட்டும் மறுவரையறை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை குறைக்க அனுமதிக்கக் கூடாது.
தெற்கில் பாஜக சிறிய எண்ணிக்கையில் இருப்பதால் வடக்கு, தெற்கு என்ற பிரிவினையை தூண்டி வெற்றி பெற நினைக்கிறது. தமிழக மற்றும் தென் மாநிலங்களை இரண்டாம் தர மக்களை போன்று நடத்துகிறது என்றாா்.