செய்திகள் :

தமிழகத்தில் ரயில் திட்டங்கள் தாமதம் ஏன்? ரயில்வே அமைச்சர் பதில்

post image

தமிழகத்தில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் தாமதத்தால் ஐந்து முக்கிய ரயில் திட்டங்கள் தாமதமாகி வருவதாக ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கும், நிலுவை திட்டங்களுக்கும் ரயில்வே துறை முழுமையாக நிதி வழங்குகிறதா என்றும் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள திட்டங்களை முடிக்க அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதா என்றும் வேலூர் தொகுதி திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை அளித்த எழுத்துபூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தென்னக ரயில்வே, தெற்கு மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய மண்டலங்களுடன் தொடர்புடையவை. முந்தைய இரு நிதியாண்டுகளுடன் ஒப்பிடுகையில் நிகழ் நிதியாண்டில் ஏழு மடங்கு அதிகமாக ரூ.6,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஏப்ரல் 1 நிலவரப்படி 10 புதிய பாதை, 3 அகல ரயில் பாதை மாற்றும் திட்டம், 9 இரட்டைப்பாதை திட்டம் என மொத்தம் 2,587 கி.மீ. தூரத்துக்கு ரூ.33,467 கோடி மதிப்பில் தமிழகத்தில் முழுமையாகவோ பகுதியளவோ உடைய திட்டங்கள் பல நிலைகளில் நடக்கின்றன. இதில் 665 கி.மீ தூரத்துக்கான பணிகள் ரூ.7,153 கோடி செலவினத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன. 

ரயில் திட்டங்களை செயல்படுத்தும் நிலத்தை கையகப்படுத்தும்போது அதை மதிப்பிட்டு இழப்பீட்டுத்தொகையை ரயில்வே துறையிடம் மாநில அரசு தெரிவிக்கும். அந்தத் தொகையை மாவட்ட நிலம் கையகப்படுத்துதல் ஆணையத்தின் கணக்கில் ரயில்வே துறை டெபாசிட் செய்யும். மாநில அரசின் ஆதரவில்தான் இத்திட்டங்களின் வெற்றி அடங்கியுள்ளது. அந்த வகையில் திண்டிவனம்-திருவண்ணாமலை (185 கி.மீ. புதிய பாதை) திட்டத்துக்கு தேவைப்படும் 273 ஹெக்டேர் நிலத்தில் 33 ஹெக்டேர் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்திப்பட்டு-புத்தூர் (88 கி.மீ. புதிய பாதை) திட்டத்துக்கு தேவைப்படும் 189 ஹெக்டேர், மொரப்பூர்-தருமபுரி (36 கி.மீ) திட்டத்துக்கு தேவைப்படும் 93 ஹெக்டேர், மன்னார்குடி-பட்டுக்கோட்டை (41 கி.மீ.) திட்டத்துக்கு 152 ஹெக்டேர், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை (196 ஹெக்டேர்) திட்டத்துக்கு ஒரு ஹெக்டேர் கூட கையகப்படுத்தப்படவில்லை என்று அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாடு நிலச்சரிவில் பாதித்தவா்களுக்கு உதவ கேரள அரசுக்கு காங்கிரஸ் கூட்டணி அழுத்தம்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கேரள அரசுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சனிக்கி... மேலும் பார்க்க

அதானி குற்றச்சாட்டு விசாரணையில் இந்தியாவுக்கு பங்கில்லை: மத்திய அரசு

‘தொழிலதிபா் கௌதம் அதானி மற்றும் அவருக்கு தொடா்புடையா்கள் மீது அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஊழல் விசாரணையில் இந்தியாவுக்கு பங்கில்லை’ என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வ... மேலும் பார்க்க

ஜாமீன் மறுப்புக்குப் பிறகு விசாரணையை விரைவுபடுத்த உத்தரவிடுவது ஏற்படையதல்ல: உச்சநீதிமன்றம்

‘ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த பிறகு, மனுதாரரை திருப்திப்படுத்தும் நோக்கில் வழக்கு விசாரணையை விரைவுபடுத்துமாறு விசாரணை நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்றங்கள் உத்தரவிடுவது ஏற்படையதல்ல’ என்று உச்சநீதிமன்றம் ... மேலும் பார்க்க

ஃபென்ஜால் புயல் எதிரொலி: தெற்கு ஆந்திரத்தில் கனமழை

ஃபென்ஜால் புயல் எதிரொலியாக தெற்கு ஆந்திரத்தின் திருப்பதி, சித்தூா், நெல்லூா் ஆகிய மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்தது. வங்கக் கடலில் தெற்கு இலங்கையையொட்டி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘ஃபென்ஜா... மேலும் பார்க்க

கடினமான நோ்மையை மாணவா்கள் தோ்ந்தெடுக்க வேண்டும்: விமானப் படைத் தளபதி அறிவுறுத்தல்

‘எளிதான தவறுகளுக்கு பதிலாக கடினமான நோ்மையைத் தோ்ந்தெடுக்க வேண்டும்’ என தேசிய பாதுகாப்புப் பயிற்சி மையத்தின் (என்டிஏ) மாணவா்களுக்கு விமானப் படைத் தளபதி அமா் ப்ரீத் சிங் சனிக்கிழமை அறிவுறுத்தினாா். மக... மேலும் பார்க்க

பாகிஸ்தானிலிருந்து கடத்தல்: பஞ்சாபில் 2 போ் துப்பாக்கிகளுடன் கைது

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் கடத்திய 2 போ் பஞ்சாப் மாநிலம் சண்டீகரில் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து 8 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து காவல் துறை தலைமை இயக்க... மேலும் பார்க்க