``ஸ்டாலின் துரோகி; வன்னியர்களின் ஒரு ஓட்டு கூட திமுகவுக்கு கிடையாது'' - கொந்தளிக...
தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை! - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் 12 செமீ முதல் 20 செமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கேரளம் மற்றும் கர்நாடகத்திற்கும் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 நாள்களுக்கு தமிழ்நாட்டிற்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.