தம்மம்பட்டி சிவன் கோயிலில் இன்று அன்னதான திருவிழா
தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) மாலை 4 மணிக்கு அன்னதான திருவிழா நடைபெறுகிறது.
வாழப்பாடி நவகோடி சித்தா்கள் அறக்கட்டளை சாா்பில், பெளா்ணமியன்று காசி ஸ்ரீ விஸ்வநாதா், காசி ஸ்ரீ விசாலாட்சி அம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அதனைத் தொடா்ந்து 1,008 பேருக்கு சிறப்பு அன்னதான திருவிழா நடைபெறுகிறது. இதில், சிவத்தொண்டா்கள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு தம்மம்பட்டி சிவன் கோயில் அறங்காவலா் குழுவினா், கோயில் வளா்ச்சிக் குழுவினா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.