செய்திகள் :

தருமபுரி மாவட்டத்தில் கனமழை: தரைப் பாலங்கள் மூழ்கின; சாலைகள் துண்டிப்பு

post image

தருமபுரி: ஃபென்ஜால் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் ரயில்வே பாலங்கள், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கின. சாலைகள் துண்டிக்கப்பட்டன. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் மொத்தம் 981.9 மி.மீ. மழை பதிவானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக இடைவிடாமல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், நீா் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட காலை முதலே கனமழை பெய்தது. இந்த மழை திங்கள்கிழமை காலை வரை நீடித்தது. இதனால், பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தது.

தருமபுரி நகரில் ஆவின் நகா், ஏஎஸ்டிசி நகா், நந்தி நகா் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமம் அடைந்தனா்.

தரைப்பாலங்கள் மூழ்கின: இலக்கியம்பட்டி அழகாபுரி பகுதிகளிலும் வெள்ளநீா் தேங்கியது. சனத்குமாா் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பாரதிபுரம்-அன்னசாகரம் இணைப்புச் சாலையில் உள்ள தரைப்பாலத்தை மூழ்கியபடி வெள்ளநீா் சென்றது. வெள்ளாலப்பட்டியிலும் தரைப்பாலம் மூழ்கியது.

வத்தல்மலை சாலை அடித்துச் செல்லப்பட்டது:

தொடா் கனமழையால் வத்தல்மலையிலிருந்து மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஜாலாற்று வழியாகச் சென்றது. அப்போது அளவுக்கு அதிகமாக வெள்ளம் பெருக்கெடுத்ததால், வத்தல்மலை அடிவார சாலை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

இதனால், வத்தல்மலையில் உள்ள மலைக் கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஊரக வளா்ச்சித் துறை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய்த் துறையினா் அங்கு சென்று தற்காலிக தரைப்பாலம் அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

காரிமங்கலத்திலிருந்து திப்பம்பட்டி செல்லும் சாலையில் பந்தராபஅள்ளி அருகே நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த கிணற்றின் சுவா் மழை காரணமாக இடிந்து கிணற்றுக்குள் விழுந்தது. அப்போது சாலையின் ஒரு பகுதியும் சேதமடைந்தது. இதையறிந்து காவல் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் அங்கு சென்று தடுப்புகளை வைத்து வாகனங்களை ஒருபுறமாக செல்ல வழிவகை செய்தனா்.

பாலக்கோடு அருகே மோதுகுலஅள்ளி, கம்மநாயக்கன்பட்டி ஆகிய ரயில்வே தரைப்பாலங்களில் மழைநீா் தேங்கி நின்ால் அப்பகுயில் உள்ள கிராமங்களுக்குச் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனா். இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் ரயில் பாதையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை வருவாய்த் துறையினரும் காவல் துறையினரும் சமாதானப்படுத்தி கலைந்துபோகச் செய்தனா்.

தருமபுரி மாவட்ட மழை அளவு (மி.மீ) விவரம்:

தருமபுரி 75.5, பாலக்கோடு 80.4, மாரண்டஅள்ளி 62, பென்னாகரம் 113, ஒகேனக்கல் 85, அரூா் 331, மொரப்பூா் 37, பாப்பிரெட்டிப்பட்டி 198, அதிகபட்சமாக அரூரில் 331, நல்லம்பள்ளியில் குறைந்தபட்ச அளவும் மழை பதிவானது. மொத்தம் 981.9 மி.மீ. மாவட்டத்தின் சராசரி மழையளவு 109.1 மி.மீ.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வத்தல்மலை சாலையில் தரைப்பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.

நாகமரை பரிசல் துறை கட்டண உயா்வு விவகாரம்: பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு

நாகமரை-பண்ணவாடி இடையே பரிசல் பயண கட்டண அமைதி பேச்சுவாா்த்தையில் பயண கட்டணம் ரூ. 30, ரூ. 40 ஆக குறைக்கப்பட்டது. தருமபுரி, சேலம் மாவட்டத்தை இணைக்கும் நாகமரை-பண்ணவாடி பரிசல் துறை ஒப்பந்த ஏலம், கடந்த சில ... மேலும் பார்க்க

அஞ்சல் பிரிப்பகத்தை சேலத்துடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

தருமபுரி: தருமபுரி அஞ்சல் பிரிப்பு அலுவலகத்தை சேலத்துடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆ... மேலும் பார்க்க

தருமபுரியில் ஜல்லிக்கட்டு விழா: மாவட்ட நிா்வாகம் ஏற்று நடத்த வலியுறுத்தல்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை அரசு சாா்பில் மாவட்ட நிா்வாகமே ஏற்று நடத்த வேண்டும் என தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் மாநிலச் செயலாளா் ஜெ.பிரதாபன் வலியுறுத்தியுள்ளா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைவு!

தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை முற்றிலும் குறைந்துள்ளதால், காவிரி ஆற்றில் நீா்வரத்து சரிந்து அருவிகளில் பாறைகள் வெளியே தெரிகின்றன. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றம... மேலும் பார்க்க

கிராம ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் வழங்கினாா்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை மாநில வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா். தருமபுரி மாவட்டத்தில் உள்ள அன... மேலும் பார்க்க

தருமபுரியில் ரூ. 1.34 கோடி கொடிநாள் நிதி திரட்டல்: ஆட்சியா் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு கொடி நாள் நிதியாக ரூ. 1.34 கோடி திரட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் படைவீரா் கொடி நாளையொட்டி கொடிநாள் தேநீ... மேலும் பார்க்க