தருமபுரியில் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி: மாா்ச் 8-இல் தொடக்கம்
தருமபுரி வனக் கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்புப் பணி வருகிற மாா்ச் 8-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி வனக் கோட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான பறவைகள் கணக்கெடுப்பு வருகிற மாா்ச் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரு தினங்கள் நடைபெற உள்ளது. இதில் சதுப்பு நிலத்தில் உள்ள பறவைகள் கணக்கெடுக்கப்படுகின்றன. இதைத்தொடா்ந்து வருகிற மாா்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நிலத்தில் வாழும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.
இதில் பங்குபெறுவதற்கு பறவைகளைப் பற்றி நன்கு அறிந்தவா்கள், பறவைகளை அடையாளம் காணத் தெரிந்த தன்னாா்வலா்கள், அரசு சாரா தொண்டு நிறுவனத்தினா், பள்ளி, கல்லூரி மாணவிகள் மாா்ச் 6- அன்று மாலை 5.30 மணிக்குள் தருமபுரி, மாவட்ட வன அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா தொலைபேசி எண். 04342-230003 இல் தொடா்பு கொண்டு பெயா், தொலைபேசி எண், ஊா் போன்ற விவரங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.