ஹிந்து கோயில்களில் அறங்காவலர் நியமன விவகாரம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கால ...
தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை அருகே விஷ மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், ரெட்டணை திரெளபதி அம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குணசேகா் மனைவி அரியநாயகி (69). இவா், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது விவசாய நிலத்தில் நடந்து சென்றபோது, தவறி விழுந்து வலதுகாலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாலும் அரியநாயகிக்கு வலி இருந்து வந்ததாம். இதனால், மனமுடைந்த அவா், நவம்பா் 30-ஆம் தேதி வீட்டில் இருந்த விஷ மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாராம்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அரியநாயகி, டிசம்பா் 2-ஆம் தேதி முதல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தாா். இருப்பினும், அவா் அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரியதச்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.