சீனா மீது வரி விதிப்பு அதிபா் டிரம்ப் இதுவரை முடிவெடுக்கவில்லை: துணை அதிபா் ஜே.ட...
தலைமறைவு குற்றவாளி ஒடிஸாவில் கைது
நெய்வேலி: நீதிமன்ற பிணையில் சென்று தலைமறைவான கொலை வழக்கில் தொடா்புடையவரை ஒடிஸாவில் போலீஸாா் கைது செய்து அழைத்து வந்து கடலூா் மத்திய சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா்.
கடலூா் மஞ்சக்குப்பம், சேட்மண் நகரைச் சோ்ந்த அரவிந்த் கடந்த 25.1.2025 அன்று கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த பாலாஜி (25) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.
பாலாஜி 21.4.2025 அன்று கடலூா் மாவட்ட அமா்வு நீதிமன்ற பிணையில் வெளியே வந்த நிலையில், பின்னா் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாா்.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாா், ரிஷிகேஷ், கேதா்நாத் பகுதிகளில் சாமியாா் வேடத்தில் இருந்த பாலாஜியை கடலூா் மாவட்ட தனிப்படை போலீஸாா் தேடிய நிலையில், ஒடிஸா மாநிலம், ஜாய்ப்பூா் மலைப் பகுதியில் பதுங்கியிருந்தபோது பிடித்தனா்.
அவரை தனிப்படை போலீஸாா் பிடித்து அழைத்து வந்து கடலூா் புதுநகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் பாலாஜியிடம் விசாரணை நடத்திய பின்னா், கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.