செய்திகள் :

தலைமைகள் அடிச்சிக்கிட்டாலும்; நாங்கெல்லாம் பிரண்ட்ஸ்தான்- க்ரூப் சேலையில் திமுக-காங் கவுன்சிலர்கள்!

post image

சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் இன்று ரிப்பன் மாளிகையில் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், பாஜக, விசிக-வை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் கட்சி வேற்றுமைகளை கடந்து ஒரே ஸ்டைலில் க்ரூப் சேலை கட்டி வந்து கவனம் ஈர்த்திருந்தனர்.

கவுன்சிலர்கள்
கவுன்சிலர்கள்

தமிழகத்துக்கான இடைக்கால பட்ஜெட் நேற்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று மாநகராட்சிக்கான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்து வருகிறார். இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பட்ஜெட் கூட்டத்துக்கு திமுக, பாஜக, காங்கிரஸ், விசிக-வை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் 16 பேர் ஒரே கலரில் க்ரூப் சேலை கட்டி வந்து மகிழ்ச்சியாக போஸ் கொடுத்து கொண்டிருந்தனர். இதில் பாஜக-வின் கவுன்சிலர் உமா ஆனந்தும் உண்டு.

கூட்டணியில் கிலி கிளப்பிக் கொண்டிருக்கும் காங்கிரஸின் கவுன்சிலர் சுகன்யா செல்வமும் உண்டு. இதைப்பற்றி அந்த கவுன்சிலர்களிடம் கேட்கையில், 'பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் ஒரு சிறப்பான நாள். இந்த ஸ்பெசலான நாளுக்காக எங்களின் ஒருமைப்பாட்டை காண்பிக்க இப்படி ஒரே மாதிரியாக சேலை கட்டி வந்திருக்கிறோம். வெவ்வேறு கட்சியாக இருந்தாலும் மக்கள் நலனுக்காக இணைந்தே செயல்படுவோம்' என்றனர் ஒருமித்த குரலில். 'எலெக்சன் நேரத்துல இது என்னய்யா புது உருட்டா இருக்கு' என சில ஆண் கவுன்சிலர்கள் தங்களுக்குள்ளாகவே இவர்களை கலாய்த்துக் கொண்டனர்.

கவுன்சிலர்கள்
கவுன்சிலர்கள்

தலைமைகள் வேணா அடிச்சிக்கலாம்; நாங்க எப்பவும் பிரண்ட்ஸ்தான்!

Tariff: 'அதிகாரத்தை மீறி.!' - வரிக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு; ட்ரம்ப் - 'அவமானம்'?

உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பின் 'பரஸ்பர வரி'. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் 'சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)'-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார்.இதி... மேலும் பார்க்க

AI மாநாடு: சட்டையை கழற்றிப் போராட்டம் நடத்திய காங்கிரஸ் அணி; கண்டனம் தெரிவிக்கும் பாஜக!

இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பறைசாற்றும் வகையில் டெல்லியில் 'இந்திய AI உச்சிமாநாடு 2026' (India AI Impact Summit) நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரதிந... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் 'ஹவுஸ்புல்' - தொகுதிப் பங்கீட்டில் ஸ்டாலினுக்குக் காத்திருக்கும் சவால் என்ன?

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தடபுடலாக தயாராகி கொண்டிருக்கின்றன.பேரணி, பிரசாரம், கூட்டணிப் பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி என கட்சிகள் தீவிர களப்பணியில் இறங்கி இருக்கும் சூழலில், திம... மேலும் பார்க்க

KN Nehru: ``இதெல்லாம் எங்களுக்கு பின்னடைவல்ல..." - நீதிமன்ற உத்தரவு குறித்து ஆர்.எஸ் பாரதி!

அமைச்சர் கே.என்.நேரு மீதான அமலாக்கத்துறையின் ஊழல் புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அ.தி.மு.க எம்.பி இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற... மேலும் பார்க்க

`எதிர்க்கட்சித் தலைவருக்கு நன்றி' - சட்டமன்றத்தில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஸ்டாலின்மனநிறைவுடன் நிற்கிறேன்16-வது சட்டமன்றத் தொடரின் நிறைவு நாளான இன்று, முதல்வர் ஸ்டாலின் அவை உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உரையாற்றினார். அவரின் உரையில், ``பகுத்தறிவு பகலவன் தந்தை ப... மேலும் பார்க்க