செய்திகள் :

தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு!

post image

விஜய் தலைமையில் இன்று(ஜூலை 20) நடைபெறவிருந்த தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமாக தோ்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. புதிய கட்சியான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் மாநில மாநாடு, பூத் கமிட்டி மாநாடு, செயற்குழுக் கூட்டம் எனப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.

அதன் தொடா்ச்சியாக, தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை இன்று நடத்த அந்தக் கட்சியின் தலைமை திட்டமிட்டு இருந்தது.

இந்த மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில், கட்சியின் உறுப்பினர் சோ்க்கையை விரைவுபடுத்தும் வகையில் புதிய செயலியை தவெக தலைவர் விஜய் அறிமுகப்படுத்தப்பட இருந்தது.

இந்த நிலையில், செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் புதிய செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகிற ஆக. 25-ஆம் தேதி மதுரையில் தவெக இரண்டாவது மாநில மாநாடு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல: இபிஎஸ்

கூட்டணி பற்றி இபிஎஸ் பேச்சு: நயினார் நாகேந்திரன் சொன்ன பதில் என்ன?

கூட்டணி பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "2026 த... மேலும் பார்க்க

வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக வதந்தி: பொதுமக்கள் போராட்டம்

வேலூரில் நாய்க்கறி விற்பனை செய்வதாக பரவிய வந்தியைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர், சலவன் பேட்டையைச் சேர்ந்தவர் வடிவேலு (வயது 48). சமூக ஆர்வலர். இவர் வேலூர் பர்மா பஜாரில் ஓட்டல்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா இன்று(ஜூலை 20) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 28-ம் தேதி காலை ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுகிறது.108 வைணவ திவ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் கோவை, திருப்பூர் பயணம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஜூலை 22,23 ஆகிய தேதிகளில் கோவை, திருப்பூர் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.கள ஆய்விற்காக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்லும் முதல்வர் மு.க. ஸ... மேலும் பார்க்க

விஜய் பாராட்டைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு: நடிகர் ராஜூ ஜெயமோகன்

விஜய் பாராட்டியதைத் தொடர்ந்து பன் பட்டர் ஜாம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக நடிகர் ராஜூ ஜெயமோகன் தெரிவித்துள்ளார். நடிகர் ராஜூவ் ஜெயமோகன் நடிப்பில் உருவாகியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படம் வெ... மேலும் பார்க்க

மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை!

இரு மதத்தினா் இடையே மோதலைத் தூண்டும் வகையில் பேசிய வழக்கில் மதுரை ஆதீனத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மே 2-ஆம் தேதி மதுரை ஆதீனத்தின் காா் கள்ளக்குறிச்சி மாவட்டம் உள... மேலும் பார்க்க