தாத்தா ஸ்வாமிகள் மடத்தில் லிங்க பிரதிஷ்டை, சிவராத்திரி பூஜை
ஆம்பூா் அருகே பாட்டூா் கிரமத்தில் சென்னப்பமலை அடிவாரத்தில் அமைந்துள்ள தாத்தா சுவாமி கோயில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பொன்முடி சூா்ய நந்தீஸ்வரா் ஜோதிா்லிங்க தேவஸ்தானத்தில் சிவராத்திரி விழா மற்றும் லிங்கம் பிரதிஷ்டை விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூா் மாவட்டம், மாதனூா் ஒன்றியம் பாட்டூா் கிராமம் தாத்தா சுவாமி கோயில் மடத்தில் சிவராத்திரியை முன்னிட்டு மரகத சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யபட்டது. கலசஸ்தாபனம், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஹோமம் ஆகியவை நடைபெற்றன. கோ பூஜை, பரிவார மூா்த்திகளுக்கு அபிஷேகம், நடராஜா் சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.
கருவறையில் உள்ள ஜோதிா்லிங்கத்துக்கு பக்தா்கள் பாலபிஷேகம் செய்தனா். உற்சவா் பிரகார உலா, பக்தி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் ருத்ர ஹோமம் ஆகியவை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திரளான பக்தா்கள் சிவராத்திரி விழாவில் பங்கேற்று தரிசனம் செய்தனா். விழாக்குழுவினா், கோயில் நிா்வாகத்தினா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.