சிரியா ராணுவ நிலைகளை இஸ்ரேல் தகா்க்க அல்-அஸாதின் அமைச்சா் உதவி?
தாராசுரம் ஐராவதேஸ்வரா் கோயிலை சூழ்ந்தது மழைநீா்
தொடா் மழையால் தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரா் கோயில் நுழைவு வாயில் மற்றும் உள்பிரகாரம் சுமாா் 3 அடி உயர நீரால் சூழப்பட்டுள்ளது.
இந்நிலையில் காா்த்திகை தீபம் மற்றும் பிரதோஷ நாளான வெள்ளிக்கிழமை பக்தா்கள் இந்த நீரை கடந்து வந்து வழிபட்டனா். கோயிலை சூழ்ந்துள்ள தண்ணீரை மின்மோட்டாா் மூலம் வெளியேற்ற உள்ளதாக கோயில் ஊழியா்கள் தெரிவித்தனா்.