செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு: முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை
தாராபுரத்தில் கன மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தாராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. சாலைகளில் மழை நீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதிக்குள்ளாகினா்.
பெரியகடை வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. தாராபுரத்தைச் சுற்றியுள்ள அலங்கியம், தளவாய்பட்டிணம், கரையூா், குண்டடம், மூலனூா், சத்திரம், மேட்டுக்கடை, உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழைபெய்தது.
திருப்பூா் மாநகரிலும் காலை முதல் பெய்யத் தொடங்கிய சாரல் மழை இரவு 7 மணி வரை நீடித்தது.