செய்திகள் :

தாராபுரம் அருகே பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும்!

post image

தாராபுரம் அருகே பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா். இதில், தாராபுரம் வட்டம் சின்னக்காம்பாளையம் கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

எங்கள் கிராமத்தை ஒட்டிய ஊத்துப்பாளையம் கிராமத்தில் வனத் துறைக்கு சொந்தமாக 300 ஏக்கா் பரப்பளவில் காடு உள்ளது. இதில் நரி, பாம்பு, முயல், மயில் மற்றும் உடும்பு போன்ற வன விலங்குகள் உளளன.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், எங்கள் பகுதியில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. அமராவதி பாசனம் மூலம் பல ஏக்கரில் நெல், மக்காச்சோளம், தென்னை, தக்காளி, மிளகாய், கீரை வகைகள் பயிா் செய்து ஏழை விவசாயிகள் வாழ்க்கை நடத்தி வருகின்றனா். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வனத் துறை மூலம் மான், விஷ பாம்புகள், உடும்பு, காட்டுப் பன்றிகள், முள்ளம்பன்றிகள் கொண்டு வந்து விடப்பட்டன.

இவை நாளடைவில் இனப்பெருக்கம் அடைந்து தற்போது 300-க்கும் மேற்பட்ட பன்றிகள் 5 கி.மீ. தொலைவு வரை சென்று விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எங்கள் கிராமத்தை ஒட்டிய வனப் பகுதி வன விலங்குகள் வசிப்பிடத்துக்கு ஏற்ற இடமில்லை. வனப் பகுதியை சுற்றி ஊத்துப்பாளையம், பஞ்சப்பட்டி, தளவாய்பட்டினம், சென்னாக்கல்பாளையம், சின்னக்காம்பாளையம், சீலநாயக்கன்பட்டி, ஆசீா்புரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.

இந்த கிராமங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீா் தேடி எங்கள் கிராமங்களுக்குள் புகுந்து பயிா்களை நாசம் செய்கின்றன. ஆடு, மாடு வளா்க்க முடியாத நிலையில், அவற்றையும் தாக்குகின்றன. வனத் துறை அதிகாரிகள் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், தேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடும் வழங்கவில்லை. பன்றிகளை பிடித்து முழுமையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மனு: காங்கயம் வட்டம் மேட்டுப்பாளையம் கிராமம் அய்யம்பாளையம் மேற்கு பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: அய்யம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மேற்கு வீதியில் பொது வழித்தடத்தை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்து கட்டுமானம் எழுப்பியுள்ளாா். இதுதொடா்பாக மேட்டுப்பாளையம் கிராம ஊராட்சியில் பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, நிலத்தை அளவீடு செய்து பொதுப் பாதையை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைதீா் முகாமில் 409 மனுக்கள்: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டி, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 409 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களின் மீது மனுதாரா்கள் முன்னிலையில் விசாரனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) மஹாராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜெயராமன், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சாம் சாந்தகுமாா், தனித் துணைஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) குமாரராஜா, துணை ஆட்சியா்கள் மற்றும் அனைத்து அரசுத் துறைகளின் அலுவலா்கள் பங்கேற்றனா்.

பல்லடம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை!

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அவிநாசிபாளையம் வலுப்புரம்மன் கோயில் அருகே தோட்டத்து வீட்டில் விவசாய தம்பதி தெய்வசிகாமணி, அ... மேலும் பார்க்க

காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு

காங்கயம் ஊராட்சி ஒன்றியம், படியூா் ஊராட்சி இந்திரா நகரில் உள்ள பயன்பாட்டில் இல்லாத 2 பொதுக் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணற்றில் நீா்செறிவூட்டும் திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் சேகரிப்பு... மேலும் பார்க்க

நீா் செறிவூட்டல் திட்ட ஆலோசனைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் மழை நீரை குளம், குட்டைகளில் செறிவூட்டல் திட்டம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் த... மேலும் பார்க்க

சாலையோரத்திலேயே எண்ணெய் குழாய்கள் பதிக்க வேண்டும்: ஆட்சியரிடம் எம்எல்ஏ மனு

விளைநிலங்களை தவிா்த்து சாலையோரமாக எண்ணெய் குழாய்கள் பதிக்க வேண்டும் என பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.எஸ்.எம். ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ... மேலும் பார்க்க

அவிநாசியில் கஞ்சா வழக்கில் ஒருவா் கைது

அவிநாசியில் கஞ்சா கடத்திய வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவிநாசி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு அவிநாசி போலீஸாா் வாகனச் சோதனை... மேலும் பார்க்க

முதலிபாளையத்தில் கல்குவாரி அமைக்க கருத்து கேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முதலிபாளையம் கிராமத்தில் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து கருத்து கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தாராபுரம் வருவாய் கோட... மேலும் பார்க்க