தாழக்குடி பேரூராட்சியில் டெங்கு விழிப்புணா்வு முகாம்
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி பேரூராட்சியில் டெங்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
செயல் அலுவலா் முகமதுஆசிக்ராஜா தலைமை வகித்தாா். பேரூராட்சித் தலைவா் சிவகுமாா் முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் ராஜா, பேரூராட்சி உறுப்பினா்கள் ரவிபிள்ளை, ரோகிணி, சூரியபாா்வதி, வேணி, எழிலரசி, காா்த்திகேயன், அழகம்மாள், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளா்கள் ராமதாஸ், அஜய்ராஜ் ஆகியோா் டெங்கு பாதிப்பு உள்ளிட்டவை குறித்துப் பேசினா்.
பொதுமக்களிடம் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதில், டெங்கு தடுப்புப் பணியாளா்கள் பங்கேற்றனா்.