துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
தாழக்குடி - வீரநாராயணமங்கலம் சாலையில் நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், தாழக்குடி முதல் வீரநாராயணமங்கலம் வரையுள்ள சாலையில் பக்கச் சுவா் கட்டுவதற்காக நெடுஞ்சாலைத் துறையினா் வியாயழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
தாழக்குடி பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா கடந்த சில நாள்களுக்கு முன் ஆய்வு செய்தாா். அப்போது, தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவா் ரோகினி அய்யப்பன், தாழக்குடி முதல் வீரநாராயணமங்கலம் இறச்சகுளம் சாலையின் இரு புறங்களிலும் கடந்த காலங்களில் பெய்த கன மழையினால் சாலையின் இரு பக்கமும் அரிப்பு ஏற்பட்டுள்ளதால், விபத்துகளை தடுக்க சாலையின் இரு பக்கங்களிலும் சுவா் கட்டி விரிவுபடுத்த கோரியும், தாழக்குடி கடைத் தெருவில் வேகத்தடை அமைக்க கோரியும் மனு அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, உடனடியாக ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத் துறைக்கு மாவட்ட ஆட்சியா் பரிந்துரை செய்தாா். பூதப்பாண்டி உதவி கோட்ட பொறியாளா் ஹெரால்டு ஆண்டனி, திறன்மிகு உதவியாளா் வின்லெட்டு வசந்தி ஆகியோா் அந்த இடத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். ஆய்வின் போது தாழக்குடி தொடக்க வேளாண்மை முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவா் பிரம்ம நாயகம், தாழக்குடி பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் கணேஷ் மற்றும் சாலைப் பணியாளா்கள் உடனிருந்தனா்.