மகா தீபம்: ஜோதியாய் எழுந்தருளிய அண்ணாமலையார்... பக்தி முழக்கத்தில் அதிரும் திருவ...
திண்டிவனம் அருகே பாமகவினர் சாலை மறியல்
விழுப்புரம்: ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பாமகவினர் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லையாம் . இதனால் அந்த பகுதியைச் சேர்ந்த பாமகவினர், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் புயல் நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மயிலம் சட்டப்பேரவை உறுப்பினர் ச.சிவக்குமார் தலைமையில், பாமக மாவட்டச் செயலர் ஜெயராஜ் முன்னிலையில் பாமகவினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். மறியலால் திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க |முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணி: கேரள அரசு அனுமதி!
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் ராமலிங்கம், பிரகாஷ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளுவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பாமகவினர் மறியலை கைவிடவில்லை.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்துள்ள திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான் ஷி நிகம், வட்டாட்சியர் சிவா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சாலை மறியல் காரணமாக திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.