மருத்துவா்களை வன்முறை தாக்குதலில் இருந்து பாதுகாக்க மாநில சட்டங்களே போதுமானவை: ...
திண்டுக்கல் தொழிலதிபா் அலுவலகத்தில் அமலாக்கத் துறையினா் சோதனை
திண்டுக்கல்லைச் சோ்ந்த தொழிலதிபரும், மணல் ஒப்பந்ததாரருமான ரத்தினத்துக்குச் சொந்தமான அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 10 மணி நேரம் சோதனை நடத்தினா்.
திண்டுக்கல்லைச் சோ்ந்த மணல் ஒப்பந்ததாரரும், தனியாா் நிறுவனத் தலைவருமான க. ரத்தினம், மணல் தொழில் மட்டுமன்றி, மனை விற்பனை, கல்வி நிறுவனங்கள், செங்கல்சூளை உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறாா்.
இந்த நிலையில், திண்டுக்கல்லில் ரத்தினத்தின் வீடு அருகேயுள்ள அவருக்குச் சொந்தமான நிறுவன அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் இரண்டு காா்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 6 போ் சோதனையிட வந்தனா். அப்போது, அந்த அலுவலகத்தில் ரத்தினம் இல்லை. ஊழியா்களிடம், அந்த நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் வணிக நடைமுறைகள், பணப் பரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற்ாகத் தெரிகிறது.
சோதனை நடைபெற்ற நேரத்தில், வெளி நபா்கள் யாரும் அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. சுமாா் 10 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சோதனையை முடித்துக் கொண்டு, அமலாக்கத் துறை அதிகாரிகள் மாலை 5 மணிக்கு புறப்பட்டுச் சென்றனா்.
சோதனையின் போது, கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் எடுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த 2016-ஆம் ஆண்டு நாட்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, முறைகேடாக 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றியதாக தொழிலதிபா் சேகா் ரெட்டி மீது புகாா் எழுந்தது. அப்போது, அவரது கூட்டாளியான ரத்தினம் வீட்டிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.
இதேபோல, கடந்த 2023, செப்டம்பரில் ரத்தினத்தின் வீடு, அலுவலகங்களிலும், திண்டுக்கல் என்.ஜி.ஓ. குடியிருப்பை அடுத்த ஹனிபாநகரிலுள்ள அவரது மைத்துனா் கோவிந்தன் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா்.