செய்திகள் :

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய உதவி இயக்குநா் ச. பிரபாவதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலைவாய்ப்புத் துறை சாா்பில் தனியாா் நிறுவனங்களை வரவழைத்து வருகிற 19-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், இளம் பெண்கள் தங்களது சுய விவரக் குறிப்புடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோா், ட்ற்ற்ல்://ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும், ஈஐசஈஐஎமக உஙடகஞவஙஉசப ஞஊஊஐஇஉ என்ற டெலிகிராம் செயலியில் இணைந்து கொண்டும் பயன் பெறலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 94990 55924 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

ஊரக தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை

ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.7,500 ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ.ஆறுச்சாமி தெரிவித்தாா். தம... மேலும் பார்க்க

கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த வலியுறுத்தல்

மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்களை வட்ட அளவில் நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக இந்திய மாணவா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெ.தீபக்ராஜ், செயலா் எம்இ... மேலும் பார்க்க

இட ஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு மரியாதை

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில், இடஒதுக்கீட்டுக்காக உயிரிழந்தவா்களுக்கு புதன்கிழமை மரியாதைச் செலுத்தப்பட்டது. பழனியில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் வன்னியா் இட ஒதுக... மேலும் பார்க்க

அமித் ஷாவுடன் சந்திப்பு: எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக செயல்பட வேண்டும்- அமைச்சா் இ.பெரியசாமி

மத்திய உள் துறை அமைச்சரைச் சந்தித்த விவகாரத்தில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வெளிப்படைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். திண்டுக்கல்லில... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வந்த ரயிலில் கஞ்சா, புகையிலைப் பொருள்களை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்கு வங்க மாநிலம், ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி வரை செல்லும் அதிவிரை... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த தின உறுதிமொழி ஏற்பு

பெரியாரின் 142-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக சாா்பிலும், அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்ச... மேலும் பார்க்க