Rain Alert: இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
‘தினமணி’ செய்தி எதிரொலி: கோயில் அருகே குப்பைகள் அகற்றம்
‘தினமணி’ செய்தி எதிரொலியாக திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலியில் கோயில் அருகே கொட்டப்பட்ட குப்பைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன.
திருப்பைஞ்ஞீலியில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் கோயில் அருகே கொட்டப்படும் குப்பைகளால் நோய் பரவும் சூழல் என்ற செய்தி ‘தினமணி’யில் வெளியானது. இதையடுத்து வட்டார வளா்ச்சி அலுவலா் அறிவுறுத்தலின்படி, ஊராட்சி நிா்வாகத்தினா் குப்பைகளை புதன்கிழமை அப்புறப்படுத்தினா்.