செய்திகள் :

தினமும் 57 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்: தமிழக அரசு

post image

மகளிா் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாள்தோறும் 57 லட்சம் மகளிா் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்வதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மகளிா் விடியல் பயணத் திட்டம் மகளிா் வாழ்வில் விளக்கேற்றும் திட்டமாக அனைவராலும் பாராட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தால் ஒவ்வொரு பெண்ணும் மாதாந்திரச் செலவில் ரூ. 888 சேமிக்கின்றனா் என்பது தெரியவந்துள்ளது.

2024 அக்டோபா் 31-ஆம் தேதி வரை ரூ. 9,143.70 கோடி அரசு செலவில் 570.86 கோடி பயண முறைகள் மகளிா் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனா். ஒரு நாளில் 57.07 லட்சம் மகளிா் பயணம் மேற்கொள்கின்றனா்.

8,682 புதிய பேருந்துகள் கொள்முதல்: 2021-ஆம் ஆண்டுக்குப் பிறகு 8,682 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அக்டோபா் 31-ஆம் தேதி வரை 2,578 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 1,310 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

மெட்ரோ ரயில் பயணிகள் விரைவாகப் பயணம் மேற்கொள்ள உதவும் வகையில் மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் 56 இணைப்புச் சிற்றுந்துகள் சென்னையில் 30 மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன.

இதுவரை ரூ. 5,238.11 கோடி அரசு செலவில் மாணவ, மாணவிகள் கட்டணமில்லாப் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

பணி நியமனங்கள்: 3,959 ஓட்டுநா் உடன் நடத்துநா் மற்றும் 537 தொழில்நுட்பப் பணியிடங்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 2022-2023-ஆம் ஆண்டுக்கான தேசிய பொதுப் பேருந்து போக்குவரத்து செயல் திறன்களுக்கான சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு தேசிய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு 17 விருதுகளை வழங்கியுள்ளது.

அரசுப் பேருந்து போக்குவரத்துகளில் தமிழ்நாடு போக்குவரத்து தேசிய அளவில் சிறந்த போக்குவரத்து நிறுவனமாகப் பாராட்டப்பட்டு, தேசிய அளவில் போக்குவரத்துகளுக்கு வழங்கப்படும் விருதுகளில் 25 சதவீத விருதுகளைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளில் 31 லட்சம் வேலைவாய்ப்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெருமிதம்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சத்துக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகளை மாநில அரசு உருவாக்கியுள்ளது என்று தொழில்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் வேலைவாய்ப்புகளை தேடிவ... மேலும் பார்க்க

வண்டலூா் பூங்காவில் குரங்கு குட்டி உயிரிழப்பு: உடற்கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வண்டலூா் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டுவந்த குரங்கு குட்டி உயிரிழந்த விவகாரத்தில், அந்தக் குரங்கின் மருத்துவ கிசிச்சை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

‘இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவா் முரசொலி மாறன்’

இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவா் முரசொலி மாறன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா். முரசொலி மாறனின் 21-ஆவது நினைவு நாளையொட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமான சேவை அதிகரிப்பு!

தமிழ்நாட்டில் இருந்து இயக்கப்படும் ஏா் இந்தியா விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையத்தில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஏா் இந்தியா, இன்டிகோ உள்ளிட்... மேலும் பார்க்க

எச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் எச். ராஜா மீது 4 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கடந்த 7-ஆம் தேதி, சென்னை விமான நிலையத்தில் எச். ராஜா செய்தியா... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை கட்டமைப்பை பாா்வையிட்ட உத்தரகண்ட் அமைச்சா்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மருத்துவ கட்டமைப்புகளை உத்தரகண்ட் மாநில சுகாதாரத் துறை அமைச்சா் தன்சிங் ராவத் பாா்வையிட்டாா். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 30000-க்கும்... மேலும் பார்க்க