செய்திகள் :

திமுக Vs காங்கிரஸ்: 'துரோகத்தை நாளை புதிய கூட்டாளிக்கும்.!'- திமுக; 'பாஜக உடன் Dealing'- காங்கிரஸ்

post image

நேற்று தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இதுவும் ஒன்று - "முதுகில் குத்திய காங்கிரஸ் கட்சிக்குக் கண்டனம்!

கடந்த பல தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணம் கழக உடன்பிறப்புகள்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது! மறைக்க முடியாது!

தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க. இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம்

நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க.வினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றனர். தேசிய கட்சியாக இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர்.

இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல்

ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர். பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது.

அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர்.

தி.மு.க. ஆட்சியமைக்க வேண்டும் என விரும்பிய மக்களின் வாக்குகளால்தான் இன்று அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்களே தவிர, இது அவர்கள் தங்கள் சொந்தச் செல்வாக்கினால் பெற்ற வெற்றியல்ல என்பதைக்கூட உணராமல், வரலாறு படைத்துவிட்டதாக உளறுகிறார்கள்.

மாணிக்கம் தாக்கூர் எம்.பி
மாணிக்கம் தாக்கூர் எம்.பி

சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்தக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது".

இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...

"ரிசல்ட் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே DMK - ADMK secret talks ஆரம்பிச்சுட்டாங்க. அதையும் ஒரு senior BJP leader facilitate பண்ணினார். இப்போ அது slowly வெளியே வருது.

Congress எப்பவும் BJP உடன் compromise ஆகாது. BJP உடன் underground dealing வைத்துக்கிட்டு வெளியே secular mask போட்டுக்கிறவர்களை நம்ப முடியாது. அதனால்தான் 5ம் தேதி itself நாங்க clear ஆக சொல்லிட்டோம் — BJP உடன் backdoor politics ஆடுறவர்களோட பேசவே worth இல்லைன்னு. நாங்க எடுத்த முடிவு simple — Tamil Naduல secular government க்கு மட்டும் தான் support.

இப்போ DMK Youth Wing Congress-ஐயும் Rahul Gandhi-யையும் target பண்ணி resolution pass பண்ணுது. ஏன்னா அவர்களோட plan flop ஆயிடுச்சு. Plan என்னனா? BJP ஆசைப்பட்ட மாதிரி Vijay CM ஆகுறதை stop பண்ணணும். ஆனா அது நடக்கல. அதான் இப்போ இவ்வளவு கோஷம், resolution, drama எல்லாம்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

Cry cry cry

Tamil Nadu மக்கள் உங்க true colours எல்லாம் பாத்துட்டாங்க.

IUML leader கூட உங்க dealing expose பண்ணிட்டார்.

VCK leader கூட expose பண்ணிட்டார்.

CPM leader கூட உங்க dealing பற்றி openஆ சொல்லிட்டார்.

எவ்வளவு Congress-ஐ attack பண்ணினாலும் உண்மை மாறாது. மக்கள் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க".

'நான் நவீனகால இயேசு' - வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நசீர் பெஸ்ட்டின் பின்னணி

அமெரிக்க நேரப்படி நேற்று மாலை, வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.வெள்ளை மாளிகைக்கு வெளியே உள்ள செக் பாயிண்டில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து பாதுகாப்பு அதிக... மேலும் பார்க்க

"திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றால் புரட்சி வெடிக்கும்"- கொந்தளித்த அமைச்சர் ராஜேஷ்குமார்

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி ஏற்றபின் முதன் முதலாக குமரி மாவட்டம் வந்த ராஜேஷ்குமாருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் விளவங்கோடு எம்.எல்.ஏ டி.டி.பிரவீன், குமரி மேற்கு மா... மேலும் பார்க்க

கேரளம்: போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க 'ஆபரேஷன் தூஃபான்' அறிவித்தார் மாநில உள்துறை அமைச்சர்!

போதைபொருள் புழக்கத்தில் இந்தியாவில் மூன்றவது மாநிலமாக கேரளம் உள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. போதை கலாச்சாரத்தை தடுக்கும் விதமாக புதிதாக ப... மேலும் பார்க்க

வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு: ட்ரம்ப் Safe; பதில் தாக்குதலில் குற்றவாளி இறப்பு

சரியாக ஒரு மாத இடைவெளிக்குள், அமெரிக்காவில் கவனிக்கத்தக்க இன்னொரு துப்பாக்கிச் சூடு நிகழ்வு நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 25-ம் தேதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டன்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விருந்து நி... மேலும் பார்க்க

'புகாரை வாபஸ் பெற முடியாது' - பிடிவாத எடப்பாடி; டென்ஷனில் எம்எல்ஏ-க்கள்; தவெக-வின் திட்டம் என்ன?

அ.தி.மு.க-வைச் சேர்ந்த வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் குழுவினர், கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவரது உத்தரவையும் மீறி, சட்ட... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை: "ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை" – தவெக அரசு மீது எஸ்.பி. வேலுமணி விமர்சனம்

கோவையில் 10 வயது சிறுமி படுகொலை வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில், “கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சார்ந்த 10 வயது சிறுமி கடந்த 21ம் தேதின... மேலும் பார்க்க