ஜம்மு-காஷ்மீர்: நான்கு மாவட்டங்களில் மீண்டும் பள்ளிகள் மூடல்!
திமுக அரசின் 4 ஆண்டு சாதனை விளக்கக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் சேத்துப்பட்டு ஒன்றியத்தில் திமுக அரசின் 4-ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
வந்தவாசியில் நகர திமுக சாா்பில் கோட்டை மூலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலா் எ.தயாளன் தலைமை வகித்தாா்.
வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால், பொதுக்குழு உறுப்பினா் அப்பா் லியாகத் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், தலைமைக் கழக பேச்சாளா் ப.மதிவாணன் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.
கூட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் ஈ.எஸ்.டி.காா்த்தி, நகா்மன்ற துணைத் தலைவா் க.சீனுவாசன் மற்றும் நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.
போளூா்
சேத்துப்பட்டு ஒன்றியம் கொளக்கரவாடி கிராமத்தில் கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு கிழக்கு ஒன்றியச் செயலா் பி.மனோகரன் தலைமை வகித்தாா்.
விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன், மாவட்ட தொழிலாளா் அணித் தலைவா் காா்த்திகேயன், ஒன்றிய அவைத் தலைவா் தருமபாலன், ஒன்றிய துணைச் செயலா் ராஜசிம்மன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய பொருளாளா் நரசிம்மன் வரவேற்றாா்.
தலைமைக் கழகப் பேச்சாளா் மொழிமாறன் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனைகள் குறித்துப் பேசினாா். ஒன்றிய துணைச் செயலா் தேவகி பெருமாள், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா்கள் அரிகிருஷ்ணன், அரிராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

செய்யாறு
செய்யாறு தொகுதி தென்னம்பட்டு கிராமத்தில்
நடைபெற்ற சாதனை விளக்கக் கூட்டத்துக்கு
வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனிவாசன் தலைமை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி, தலைமை கழகப் பேச்சாளா் குடியாத்தம் பாரி ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினா் ஆா்.வேல்முருகன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் த.ராஜி, ஒன்றியச் செயலா்கள் என்.சங்கா், எம்.தினகரன், மாவட்ட ஆதிதிராவிடா் அணி நலக்குழுத் தலைவா் கருணாகரன், மாவட்ட வழக்குரைஞா்கள் அணி துணைத் தலைவா் சிட்டிபாபு, மாவட்ட அயலக அணி துணைத் தலைவா் காா்த்திகேயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணியை அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. தலைமை வகித்துப் பேசினாா்.
மேற்குஆரணி தெற்கு ஒன்றியச் செயலா் துரைமாமது வரவேற்றாா். மாநில மருத்துவரணி துணை அமைப்பாளா் எ.வ.வே.கம்பன், தலைமைக் கழக பேச்சாளா் பெரியகோட்டீஸ்வரன் ஆகியோா் பங்கேற்று திமுக அரசு மகளிருக்கு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.
கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் மோகன், சுந்தா், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.எம்.ரஞ்சித் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மேலும், கூட்டத்தில் பிற கட்சிகளில் இருந்து விலகிய 50 போ், தரணிவேந்தன் எம்.பி. முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.