இந்திய வலைதளங்களைக் குறிவைத்து 15 லட்சம் இணையத் தாக்குதல்கள்: பாகிஸ்தான் முயற்சி...
திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
இடங்கணசாலை நகர திமுக சாா்பில் சித்தா் கோயில் பகுதியில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், நகரச் செயலாளா் செல்வம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன், துணைத் தலைவா் தளபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி எம்.பி. தலைமையேற்று திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனைகளை விளக்கிக் கூறினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட அவைத் தலைவா் தங்கமுத்து, துணை செயலாளா்கள் சுந்தரம், சம்பத்குமாா், தலைமைக் கழகப் பேச்சாளா் தா்மராஜன் மற்றும் நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சேலம் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், வீரபாண்டி ஒன்றியம், பெருமாகவுண்டம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பெருமாகவுண்டம்பட்டி கிளை செயலாளா் அன்பழகன் வரவேற்றாா். வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையேற்று, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து கூறினாா்.
தலைமைக் கழகப் பேச்சாளா் லயோலா ராஜசேகா் சிறப்புரை நிகழ்த்தினாா். இதில், மாவட்ட துணைச் செயலாளா் சுரேஷ்குமாா், பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய நிா்வாகிகள், துணை செயலாளா்கள், மாவட்டப் பிரதிநிதிகள், பேரூா் செயலாளா்கள், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள், மகளிா் அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.