திமுக வாா்டு உறுப்பினா் கட்சியிலிருந்து இடைநீக்கம்
சென்னை மாநகராட்சியின் 113-ஆவது வாா்டு உறுப்பினா் பிரேமா சுரேஷ், திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
சென்னை ஆயிரம் விளக்கு 113-ஆவது வாா்டு உறுப்பினா் பிரேமா சுரேஷ், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்தாா். எனவே அவா், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொதுச் செயலா் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, 144-ஆவது வாா்டு உறுப்பினா் ஏ.ஸ்டாலின், பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.