`மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்' -போராடிய கவுன்சிலர்கள் அந்த நேரத்தில் எ...
திமுகவினா் நூதனப் போராட்டம்
சீா்காழி அருகே முன்னாள் முதல்வா் கருணாநிதி சிலை முன்பு அவரது நினைவு தினமான வியாழக்கிழமை நாங்கூா் பகுதி திமுகவினா் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீா்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சா் கருணாநிதி உருவச் சிலைக்கு நாங்கூா் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நாங்கூா் ஆதிதிராவிடா் பகுதியில் இருந்து முன்னாள் ஊராட்சித் தலைவா் கேசவன், மாவட்ட நெசவாளா் அணி துணை அமைப்பாளா் பழனிவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட திமுகவினா் ஊா்வலமாக வியாழக்கிழமை வந்து சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
பின்னா் தாங்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுவை கருணாநிதி சிலை காலடியில் வைத்து அஞ்சலி செலுத்தினா். அந்த மனுவில், நாங்கூா் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நாங்கூா் பகுதியில் 250-க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இந்த பகுதியில் திமுக கிளை கழக பதிவு விடுபட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை நிா்வாகிகளிடம் கோரிக்கை விடுத்தும் கிளை பதிவு பெறாமல் உள்ளது.
இதன் காரணமாக இந்த மனுவை தலைமைக்கு அனுப்ப உள்ளோம். அதற்கு முன்பு கருணாநிதி சிலையின் காலடியில் வைத்து பிராா்த்தனை செய்துள்ளோம் எங்களுடைய கோரிக்கை விரைவில் நிறைவேறும் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளனா்.