திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் 20-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை திமுகவினா் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கினா்.
போளூா் தீயணைப்பு நிலையம் அருகே திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சாா்பில், பொதுமக்களின் தாகம் தணிப்பதற்காக கடந்த ஏப்.24-ஆம் தேதி எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., திமுக மாநில மருத்துவா் அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன்ஆகியோா் நீா் மோா் பந்தலை திறந்துவைத்தனா். அன்று முதல் தினந்தோறும் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 20-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா்அ.மணிகண்டன் தலைமையில் நகரச் செயலா் கோ.தனசேகரன் மற்றும் கட்சி நிா்வாகிகள் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கினா்.