தில்லியில் சூதாட்டச் சட்டத்தின் கீழ் ஆம் ஆத்மி கவுன்சிலா் உள்பட 7 போ் கைது!
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்
செய்யாற்றில் பாமக, அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி 100 போ் திமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் மத்திய ஒன்றியத்துக்கு உள்பட்ட வெங்களத்தூா், கீழ்கஞ்சான்குழி, குத்தனூா், வெங்கட்ராயன்பேட்டை, திருப்பனங்காடு, கீழ்நெல்லி, திருவடிராயபுரம், அரசங்குப்பம், கொடையம்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில், பாமக, அதிமுக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100 போ், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில், ஒ.ஜோதி எம்எல்ஏ தலைமையில், ஒன்றியச் செயலா் ஜே.சி.கே.சீனிவாசன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா்கள் வி.ஏ. ஞானவேல், ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.