செய்திகள் :

திமுகவை ஏன் வம்பிழுக்கிறீர்கள்? சீமானுக்கு விஜயலட்சுமி கேள்வி

post image

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் விவாதிக்க தயாராக இருப்பதாக நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

நடிகை விஜயலட்சுமியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராக முடியாது என்று சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும், வழக்கில் சம்பந்தப்பட்ட விஜயலட்சுமியுடன் நேரில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில், சீமானின் பேச்சுக்கு பதிலளிக்கும்வகையில் நடிகை விஜயலட்சுமி விடியோ வெளியிட்டுள்ளார். விடியோவில் அவர் பேசியிருப்பதாவது, ``சீமான் மீது வழக்கு தொடர திமுகவினர்தான் என்னை அழைத்து வந்தனர் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது சீமான் கூறினார். என்னை யாரென்று தெரியாது என்று கூறியதுடன், காங்கிரஸார்தான் என்னை அழைத்து வந்ததாகக் கூறினார். மீண்டும் அவர் மீது வழக்கு தொடர்ந்தபோது, என்னை பாஜகவினர்தான் இயக்குவதாகக் கூறினார்.

2023-ல் மதுரை செல்வத்துடன் என்னிடம் பேச்சுவார்த்தை சீமான் வந்தார். மேலும், அவரைப் பற்றி வெளியில் பேசவேண்டாம் என்று கூறியதுடன் மாதந்தோறும் ரூ. 50,000 பணமும் அனுப்பினார். என்னிடமிருந்த விடியோக்களையும் பெற்றுக் கொண்டார். என்னை பொண்டாட்டி.. பொண்டாட்டி.. பொண்டாட்டி.. என்று அவர் அழைத்த விடியோக்களையும் காவல்துறையின் மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால்தான், சீமானுடைய முதல் மனைவி விஜயலட்சுமியா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிக்க:நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது; என்ன செய்ய முடியும்? - சீமான் பேட்டி

இந்த மாதிரியான கேவலமான வேலைகளில் ஈடுபடுமாறு உங்களிடம் திமுக சொல்லவில்லை; பின்னர் ஏன் திமுகவை வம்பிழுக்கிறீர்கள்? என்னுடன் நேருக்குநேர் பேச அழைப்பு விடுத்துள்ளீர்கள். நான் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன். என்னைப் பார்த்தால் எப்படி தெரிகிறது என்று கேள்வி கேட்பதற்காகவே நான் காத்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

இரண்டு நாள்களுக்கு முன்பாகக்கூட, என்னுடன் சமாதானப் பேச்சுக்கு ஆள்களை அனுப்பினர். என்னுடைய பாவம் உங்களை எப்படியெல்லாம் படுத்தப்போகிறது என்று பாருங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விஜயலட்சுமி இந்த புகாரை திரும்பப் பெற்றபோதிலும் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று பெங்களூருவில் உள்ள நடிகை விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் சாதியப் பாகுபாடு: வழக்கில் ஒருவார கால அவகாசம் அளித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இருக்கும் சாதியப் பெயர்களை நீக்குவது தொடர்பான வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க ஒருவார கால அவகாசம் அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தென்னிந்திய ச... மேலும் பார்க்க

சென்னை - தாம்பரம் இடையே 2 ரயில்கள் ரத்து!

சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் இன்று (பிப். 27) இரவு 2 புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் பிரதிநிதித்துவம்: முதல்வர் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு எல்லா உள்ளாட்சி அமைப்புகளிலும் பிரநிதித்துவம் தரப்படும் என்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சட்டத் திருத... மேலும் பார்க்க

கொளத்தூரில் பெரியார் மருத்துவமனை: முதல்வர் திறந்து வைத்தார்!

சென்னை கொளத்தூர், பெரியார் நகரில் அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ. 210 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(பிப். 27) திறந்து வைத்தார்.இப்புதிய மர... மேலும் பார்க்க

பெருநகர சென்னையின் கடன்தொகை ரூ. 3,065.65 கோடி: மேயர் பிரியா

பெருநகர சென்னையின் கடனுக்காக வட்டி மட்டும் ரூ. 8.5 கோடி செலுத்தப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: அதிமுக நிர்வாகி ஆஜர்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணைக்கு கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி சங்கர் ஆஜரானார்.நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக... மேலும் பார்க்க