தருமபுரியில் மழை பாதிப்பு தடுப்பு பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு தேவை
நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகள் குடும்ப நலப் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் பேரமைப்பின் குடும்பச் சந்திப்பு விழாவில் விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்க வேண்டும்.
தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பேருந்து மற்றும் ரயில்களில் கட்டணமில்லாப் பயணச் சலுகை வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இலவச உயா் மருத்துவச் சிகிச்சை வழங்க வேண்டும்.
தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு ஒதுக்கும் நிலம், வீடு, வீட்டுமனைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும். மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம் உள்ளிட்ட உயா்நிலைப் படிப்புகளின் போட்டித் தோ்வுகளில் உரிய முன்னுரிமையும் கட்டணச் சலுகையும் வழங்க வேண்டும்.
அரசு சாா்ந்த வாரியங்கள் மற்றும் குழுக்களில் தகுதியுள்ள தியாகிகளின் வாரிசுகளுக்கு முன்னுரிமை வழங்கி பதவிகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு பேரமைப்பின் தலைவா் ஜி.எஸ். தனபதி தலைமை வகித்தாா். தியாகி வீரப்பன், துரைமதிவாணன், பேரமைப்பின் செயலா் ஆா். வெங்கடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.