செய்திகள் :

திருச்சி: கிழிக்கப்பட்ட அன்பில் மகேஸ் பிறந்தநாள் போஸ்டர்; பின்னணியில் மேயரா? கொதிக்கும் நிர்வாகிகள்

post image

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட வாழ்த்துப் போஸ்டர்களை மாநகராட்சி ஊழியர்கள் கிழித்து அகற்றியது திருச்சி தி.மு.க-வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அன்பில் மகேஷ்

வரும் டிசம்பர் 2ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸின் 47வது பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருச்சியின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. தற்போது அந்த போஸ்டர்களை மாநகராட்சி நிர்வாகம் தனது ஊழியர்களை வைத்துக் கிழித்து, அகற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர் பிறந்தநாள் போஸ்டரையே கிழிக்கும் அளவுக்கு என்ன நடந்தது என விசாரணையில் இறங்கினோம்.

“திருச்சி மேயர் அன்பழகனின் தூண்டுதலில்தான் இந்தப் போஸ்டர்கள் கிழிக்கப்படுவதாக எங்களுக்குச் சந்தேகம் இருக்கிறது” எனப் பேசத் தொடங்கினர். ”திருச்சி மாநகராட்சி தேர்தலில் ஐந்தாவது முறையாக வெற்றிபெற்ற அன்பழகன் தி.மு.க தலைமையால் மேயராகத் தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 100 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் பெரும்பாலான கவுன்சிலர்கள் அமைச்சர் அன்பில் மகேஸின் ஆதரவாளர்கள்தான். அமைச்சரின் ஆதரவினால் மேயரான அன்பழகன் தற்போது அமைச்சருக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது எங்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

கிழிக்கப்படும் போஸ்டர்கள்

அதுமட்டுமல்ல, இதுவரை திருச்சி மாநகரில் ஒட்டப்பட்ட மற்ற எந்த போஸ்டர்களும் கிழிக்கப்பட்டதே இல்லை. அப்படியிருக்கும்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் போஸ்டர்கள் மட்டும் கிழிக்கப்படுவது யாரையோ திருப்திப்படுத்த அன்பழகன் செய்யும் தேவையில்லாத அரசியல் என்றே தோன்றுகிறது.

இதன்மூலம் திருச்சியில் தேவையில்லாத கோஷ்டி மோதல் உருவாகும் சூழலையும் ஏற்படுத்தியிருக்கிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

திருச்சி மேயர்

மற்றொரு புறம் சட்டமன்றத் தேர்தலுக்குத் தலைமை தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்தச் சூழலில் மேயர் அன்பழகனின் இந்தச் செயல் திருச்சி தி.மு.க-வில் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும்” எனக் கொதிக்கிறார்கள்.

இது குறித்து மாநகராட்சி தரப்பில் கேட்டால், "இதில் எந்த அரசியல் பின்னணியும் இல்லை” என மழுப்புகிறார்கள்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/VaigainathiNaagarigam

PAN 2.0 : புதிய பான் அட்டைக்கு விண்ணப்பிக்க என்ன தேவை... எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?!

QR கோடு, பொது பான் எண், விரைவு சேவை என்று பான் 2.0 திட்டம் சீக்கிரம் அமலுக்கு வரப்போகிறது. 'என்கிட்ட ஏற்கனவே பான் கார்டு இருக்கே...நான் என்ன செய்யணும்' என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழுந்திருக்கலாம்.... மேலும் பார்க்க

``இந்திய முப்படைகளிலும் பெண்கள் சாதனை படைக்கின்றனர்.." - கவனத்தை ஈர்த்த குடியரசுத் தலைவர் உரை

அரசு முறை பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். குன்னூர், வெலிங்டன் பகுதியில் உள்ள முப்படை அதி... மேலும் பார்க்க

`மேக் இன் இந்தியா திட்டத்தால் ராணுவ தளவாட ஏற்றுமதி 30 சதவிகிதம் உயர்வு!'- முர்மு ஊட்டியில் புகழாரம்!

நான்கு நாள் பயணமாக தமிழ்நாட்டிற்கு வருகைத் தந்திருக்கும் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தங்கியிருக்கிறார். குன்னூர், வெலிங்டன் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்புத்துறையின் முப்ப... மேலும் பார்க்க

Rain Alert : `இது தற்காலிகப் புயல்தான்..!' ரெட் அலார்ட்? ; இன்று முதல் மழை ஆரம்பம்' - பாலச்சந்திரன்

தென்மேற்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுவானதாக இல்லாமல், தற்காலிகப் புயலாக ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் இன்று மாலை லேசான மழை ஆரம்பத்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வா... மேலும் பார்க்க

திருவாரூர்: `15 வருஷமா சாலை வசதி இல்ல' - முதல்வரின் சொந்த மாவட்ட மக்கள் வேதனை!

கடந்த சுதந்திர தினத்தன்று சிறந்த நகராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருது பெற்றது திருவாரூர் நகராட்சி. ஆனால் அந்த நகராட்சியின் மையப்பகுதியிலேயே கடந்த பதினைந்து ஆண்டுகளாக முற... மேலும் பார்க்க

Trump: 'டிரம்ப் பதவியேற்பதற்குள் வாங்க..' - வெளிநாட்டு மாணவர்களை எச்சரிக்கும் கல்லூரிகள்; காரணமென்ன?

டிரம்ப் பதவியேற்பதற்குள் வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்கா வந்து சேர்ந்துவிடுங்கள். இதை நீங்கள் சற்று தாமதம் ஆக்கினாலும், நீங்கள் மீண்டும் அமெரிக்காவிற்குள் வருவது பெரிய கேள்விக்குறியே என்று அமெரிக்கக் க... மேலும் பார்க்க