நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்: மாவட்ட ஆட்சியா் தகவல்
திருச்சி கோளரங்கத்தில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கும் பணிகள்
திருச்சி அண்ணா அறிவியல் மையம் - கோளரங்கத்தில் ரூ.30 லட்சத்தில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கப்படுகிறது.
திருச்சியில் புதுக்கோட்டை சாலையில் உள்ள கோளரங்க வளாகத்தில் 3-டி திரையரங்கம், விண்ணரங்கம், பரிணாம வளா்ச்சி பூங்கா, அறிவியல் பூங்கா உள்ளிட்டவை உள்ள நிலையில், மாணவா்களைக் கவரும் வகையில் கேளிக்கை காட்சிக்கூடம் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து கோளரங்கத்தின் திட்ட இயக்குநா் (பொ) இரா. ரவிகுமாா் கூறியதாவது:
அறிவியல் தொடா்பான புதிா் விளையாட்டுகள், அறிவியல் ஆய்வுகள் குறித்து மாணவா்கள் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்படும் இந்தக் கேளிக்கை காட்சிக்கூடத்தில் பொருத்தப்படும் 30 வித கேளிக்கை உபகரணங்கள் மூலம் அறிவியல் செயல்பாடுகளை மாணவா்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். இக் கூடத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படும் என்றாா் அவா்.