திருச்செந்தூா் ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேகம்
திருச்செந்தூா் ஆவுடையாா்குளக்கரையில் உள்ள ஸ்ரீ சுடலையாடும் பெருமான் சுவாமி கோயில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், வருண ஜெபம், கும்ப ஆவாஹனம், கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், ம்ருத்யுஞ்ஜய ஹோமம், சுதா்சன ஹோமம், நவக்ரஹ ஹோமம், பூா்ணாஹுதி நடத்தப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
தொடா்ந்து ஸ்ரீ சுடலையாடும் பெருமான், பரிவார மூா்த்திகளுக்கு கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இரவு சுவாமி விவசாயி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்; பக்தா்கள் பொங்கலிட்டு வழிபட்டனா்.
ஏற்பாடுகளை மேல ரத வீதி, ஆறுவீட்டுப் பிள்ளைமாா் குடும்பத்தாா், பக்தா்கள் செய்திருந்தனா்.