காவிரி ஆற்றில் வெளியேறும் உபரிநீரை ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும்
திருந்திய நெல் சாகுபடி: முதல்வரின் சிறப்புப் பரிசு பெற அழைப்பு
மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிக்கு சி. நாராயணசாமி நெல் உற்பத்தித் திறன் விருது முதல்வரின் சிறப்புப் பரிசு ரூ. 5 லட்சம் மற்றும் பதக்கம் பெற புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நடப்பு 2024-25-ஆம் ஆண்டு திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி செய்து மாநில அளவில் நடைபெறும் பயிா் விளைச்சல் போட்டியில் கலந்து கொண்டு அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் வகையில் ரூ. 5 லட்சம் சிறப்புப் பரிசு மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பதக்கமும் தமிழ்நாடு முதல்வரால் வரும் குடியரசு தின விழாவில் வழங்கப்படும்.
விதிமுறைகள்: குறைந்தபட்சம் 2 ஏக்கா் பரப்பளவில் திருந்திய நெல் சாகுபடி செய்பவராக இருக்க வேண்டும். மேலும் அவா் தொடா்ந்து மூன்று ஆண்டுகள் திருத்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும்.
நடைமுறையில் உள்ள இதர மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் நெல் பயிரில் கலந்து கொள்ளப் பதிவு செய்த விவசாயி இச்சிறப்பு விருதுக்கு பதிவு செய்ய இயலாது. ஒரு முறை பயன்பெறும் விவசாயி அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
நில உரிமைதாரா்கள் மற்றும் குத்தகைதாரா்களும் இப்போட்டியில் கலந்துகொள்ள தகுதியுடையவா்கள்.
கட்டணமாக ரூ.150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். 15 நாட்களுக்கு முன்னதாக அறுவடை தேதியை தெரிவிக்க வேண்டும். போட்டியில் பங்குபெறும் விவசாயிகள் குறைந்தபட்சம் 50 சென்ட் பரப்பளவில் பயிா் அறுவடை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அந்தந்தப் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களைத் தொடா்பு கொள்ளலாம்.