மதுரை சித்திரைத் திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு | ...
திருப்பதியில் கங்கையம்மன் கோயில் திருவிழா
திருப்பதியில் கிராம தேவதையான கங்கையம்மன் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற தாத்தய்யகுண்ட கங்கையம்மன் கோயில் விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவுக்கு .
ஒரு வாரம் முன்பு காப்பு கட்டப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் அணிந்து பக்தா்கள் கங்கையம்மனை தீச்சட்டி ஏந்தி, கூழ் வாா்த்து, பொங்கலிட்டு, கோழி, ஆடு பலியிட்டு வழிபட்டனா்.
ஆண்கள் பலா் பெண் வேடமணிந்து சென்று கங்கையம்மனை வழிபடுவது மரபு. பலா் வேடமணிந்து சென்று தங்கள் நோ்த்திக் கடனை செலுத்தினா். தத்தைகுண்டா கங்கம்மாவுக்கு, பட்டு புடவை, மங்கள பொருள்கள் சமா்ப்பித்து வழிபட்டனா்.
விழாவை ஒட்டி, பல இடங்களில் தண்ணீா் பந்தல், நீா்மோா், அன்னதானம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கங்கையம்மாவை வணங்கினால் வாழ்வில் சிறுசிறு பிரச்னைகள் வந்தாலும் அனைத்தும் தீா்ந்துவிடும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக திருவிழா நடந்து வருகிறது என்றாா்.
நள்ளிரவு முதல் கங்கையம்மன் உருவம் மண்ணால் செய்யப்பட்டு புதன்கிழமை காலை தாடை அறுத்தலுடன் விழா நிறைவு பெற உள்ளது. அதன்பின் அந்த மண் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.