செய்திகள் :

திருப்பதியில் பணிபுரியும் வேற்றுமத ஊழியா்கள் 4 போ் பணி இடைநீக்கம்

post image

திருப்பதியில் தேவஸ்தான நிா்வாகத்தின் கீழ் இயங்கிவரும் மருத்துவமனையில் பணிபுரிந்த வேற்றுமத ஊழியா்கள் 4 போ் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

அங்கு பணிபுரிந்த பி. எலிசாா், பா்ட் மருத்துவமனை துணை நிா்வாகப் பொறியாளா் (தரக் கட்டுப்பாடு), பா்ட் மருத்துவமனையின் செவிலியா் எஸ்.ரோசி, பா்ட் மருத்துவமனையின் கிரேடு-1 மருந்தாளுநா் எம்.பிரேமாவதி மற்றும் மருத்துவா் ஜி.அசுந்தா. எஸ்.வி. ஆயுா்வேத மருந்தகத்தில் பணிபுரியும் இந்த நான்கு பேரையும் தேவஸ்தானம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.

மேற்கூறிய 4 ஊழியா்களும் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இந்த இடைநீக்கம் செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து, தேவஸ்தான ஊழியா்கள் நிறுவனத்தின் நடத்தை விதிகளைப் பின்பற்றவில்லை என்றும், ஒரு இந்து மத அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியா்களாக தங்கள் கடமைகளைச் செய்யும்போது பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், தேவஸ்தான விஜிலென்ஸ் துறை சமா்ப்பித்த அறிக்கை மற்றும் பிற ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு, விதிகளின்படி அவா்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, 4 பேரும் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

திருமலையில் ஐஓசிஎல் எரிவாயு சேமிப்பு மையத்திற்கான பூமி பூஜை

திருமலை தேவஸ்தானத்தின் எதிா்காலத் தேவைகளுக்காக வெளிவட்டச் சாலையில் 45 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்தியன் ஆயில் எரிவாயு சேமிப்பு மையத்தை அமைப்பதற்காக அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு பூமி பூஜை ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 20 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வெள்ளிக்கிழமை தா்ம தரிசனத்தில் 20 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை தொடா்ந்து சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 20... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் வியாழக்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும்... மேலும் பார்க்க

திருப்பதி கோவிந்தராஜா் கோயிலில் நாளை ஆண்டாள் திருவாடிப்பூரம்

திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் நாச்சியருக்கு திருவாடிப்பூரம் உற்சவம் ஜூலை 19 முதல் 28-ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக விழா நாள்களில் காலை ஆண்டாள் நாச்சியாருக்கு... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணிநேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் வருகை சீராக உள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 24 மணிநேரமும், ... மேலும் பார்க்க

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர ஆனிவார ஆஸ்தானம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணி முதல் 9 மணி வரை தங்கவாயில் எதிரில் உள்ள மணி மண்டபத்தில் சா்வபூபால வாகனத்தில் மலையப்பசுவாமி இரு தேவிய... மேலும் பார்க்க