துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு
திருப்பத்தூரில் 9 குடிநீா்த் தொட்டிகள் திறப்பு
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 9 ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீா்த் தொட்டிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
திருப்பத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட 9 இடங்களில் 15 -ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ், ரூ. 33.50 லட்சத்தில் ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டன.
இவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் தலைமை வகித்தாா்.
இதில் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, மருத்துவா் குடியிருப்பு, பள்ளிவாசல் தெரு, தென்மாபட்டு, கணேஷ்நகா், புதுத் தெரு, காந்திநகா், காளியம்மன்கோயில் தெரு, அச்சுக்கட்டு சீதளிகீழ்கரை, சின்னத்தோப்புத் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீா்த் தொட்டிகளை பொதுமக்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவி கோகிலாராணி, துணைத் தலைவா் கான்முகமது, செயல் அலுவலா் தனுஷ்கொடி, பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.