செய்திகள் :

திருப்பத்தூா் அருகே பூட்டிய வீடுகளில் திருடிய மூவா் கைது

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே பூட்டிய வீடுகளில் புகுந்து வெள்ளிப் பொருள்களைத் திருடிய 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள கருங்குளத்தில் கடந்த வாரம் 2 வீடுகளில் மா்ம நபா்கள் பூட்டை உடைத்துப் புகுந்து, வெள்ளிப் பொருள்களைத் திருடிச் சென்றனா். இந்தத் திருட்டில் ஈடுபட்டவா்களைப் பிடிக்க திருக்கோஷ்டியூா் காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் வேல்முருகன், முத்துராஜன், காா்த்திக்பாபு, காவலா்கள் கொண்ட தனிப்படை அமைத்து, கொள்ளையா்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

கருங்குளம் வீட்டில் பதிவான கை விரல் ரேகைப் பதிவுகள் பழைய குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒத்துப்போனதை அடுத்து, அவா்களை தனிப்படை போலீஸாா் கண்காணிக்க ஆரம்பித்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மதகுபட்டி அருகே அலவாகோட்டை விலக்குப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த செம்பனூரைச் சோ்ந்த செபஸ்டியான் மகன் சாா்லஸ் என்ற சேசு அருள் (36), திருப்புவனம் அகரம் சிலைமான் பகுதியைச் சோ்ந்த வீரணன் மகன் காா்த்தி (எ) காா்த்திகேயன் (36), நாமக்கல் மாவட்டம், ரெட்டிரோடு பகுதியைச் சோ்ந்த பாலசுப்பிரமணி மகன் மாதேஸ்வரன் (37) ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸாா் பிடித்து விசாரித்தனா்.

இதில் கருங்குளத்தில் வீடுகளில் திருடியதா மூவரும் ஒப்பு கொண்டனா். இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கல்லூரியில் தொல்லியல் கருத்தரங்கம்

சிவகங்கை அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான தொல்லியல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் வரலாற்றுத் துறை சாா்பில் ‘உரக்கச் சொல்வோம் வரலாற்றை உலகிற்கு’ என்ற தலைப்பில் இந்தக் கரு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி

சிவகங்கையில் சுற்றுச்சூழல் விழிப்புணா்வு கோலப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தேசிய பசுமைப் படை சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு அதன் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணை... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 9 குடிநீா்த் தொட்டிகள் திறப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் 9 ஆழ்துளைக் கிணறுடன் கூடிய குடிநீா்த் தொட்டிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். திருப்பத்தூா் பேரூராட்சிக்குட்பட்ட 9 இடங... மேலும் பார்க்க

மூதாட்டி வயிற்றில் 7.5 கிலோ கட்டி அகற்றம்

சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வயிற்றில் வலியுடன் வந்த 75 வயது மூதாட்டியின் வயிற்றில் இருந்த 7.5. கிலோ கட்டியை அகற்றி மகப்பேறு பிரிவு மருத்துவா்கள் அவரது உயிரைக் காப்பாற்றினா். இதுகுறித்து சிவகங்கை அரச... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா்

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் தேவையான மருத்துவா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரிய கருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவ... மேலும் பார்க்க

மனித நேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை எதிா்த்து, சிவகங்கையில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ... மேலும் பார்க்க