செய்திகள் :

திருப்பரங்குன்ற மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்; அரசின் மேல்முறையீட்டை கண்டிக்கும் பாஜக!

post image

நேற்று (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை "இந்த ஆண்டு முதல் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம்" என்று தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை இந்து அமைப்பினர், பாஜகவினர் வரவேற்றுள்ளனர். ஆனால், "இது மக்கள் நம்பிக்கை வழிபாடு சார்ந்த தீர்ப்பல்ல. மாறாக இந்தியாவின் வடபகுதியில் வழிபாட்டுத் தலங்களை முன்வைத்து மக்களிடம் மோதலை உருவாக்கி அரசியல் லாபத்தை அறுவடை செய்வதற்கான முயற்சி" என்று சமூக செயற்பாட்டாளர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது. நாளை கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் நாளை காலை இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடக்கவிருக்கிறது.

 பெ.சண்முகம்
பெ.சண்முகம்

இந்நிலையில் 'திருப்பரங்குன்ற மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றலாம்' என்ற நீதிமன்ற தீர்ப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், "கடந்த பல ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலையில் இதுவரையிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படாத சிக்கந்தர் தர்ஹாவிற்கு அருகே தீபம் ஏற்றவேண்டும் என்று முயற்சித்து வருகிறது. அயோத்தி, மதுரா, காசி, சம்பல் என்று ஒவ்வொரு இடத்திலும் புதிது புதிதாக சர்ச்சைகளை உருவாக்கி மக்களுக்கு இடையே பகைமூட்டி அரசியல் அறுவடை செய்து வரும் இந்தக் கூட்டம் இப்போது திருப்பரங்குன்றம் மலையையும் குறிவைத்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்கவில்லை. தீபம் ஏற்றுவது தொடர்பாக இப்போது உள்ள நடைமுறை தொடர வேண்டும் என்று இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு ஏற்கனவே ஒரு தீர்ப்பை கூறியுள்ள நிலையில், அதற்கு நேர் எதிராக தற்போது (டிச.1) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் 'இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றப்பட வேண்டும்' என்று தீர்ப்பளித்துள்ளார்;

இந்த தீர்ப்பு நல்ல நோக்கத்திலும் சட்டத்தின் அடிப்படையிலும் வழங்கப்பட்டது அல்ல. எனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு அமல்படுத்தக் கூடாது. உரிய முறையில் இந்த தீர்ப்பை சட்டப்படி ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது" என்று கூறியிருக்கிறார்.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

இந்தத் தீர்ப்பினை வரவேற்றிருக்கும் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, "திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, தீபம் ஏற்றி வழிபடலாம் என, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது. உயர்நீதிமன்றத் தீர்ப்பினை, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், முருகப் பெருமான் பக்தர்கள் வரவேற்ற நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மாண்புமிகு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு என்ன அவசியம் வந்தது?

ஆலயங்களைப் பராமரிக்க வேண்டிய துறையை, ஆலயங்களின் சொத்துக்களையும், நிதியையும் முறைகேடாகப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆலய நடைமுறைகளுக்கு எதிராகப் பயன்படுத்த, திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? இந்து சமய அறநிலையத்துறையை, முறைகேடாகவும், இந்து சமய மக்களுக்கு எதிராகவும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக அரசு. தேவையின்றி, பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த, ஆலய நிதியையே பயன்படுத்தும் அயோக்கியத்தனத்தை, திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று இந்து சமய அறநிலையத்துறை, மேல்முறையீடு தாக்கலை கண்டித்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

``தேமுதிக தொண்டர்களை பதவியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டுமென்பது என் ஆசை'' - பிரேமலதா விஜயகாந்த்

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன.அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கான வியூக... மேலும் பார்க்க

கோபி: அதிமுக கூட்டத்தில் தொண்டர் பலி; "ரூ.20 லட்சம் இழப்பீடு" - எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்'எனும் பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.அவ்வகையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோபிசெட்டிபாளையத்... மேலும் பார்க்க

திருப்பத்தூர் பேருந்து விபத்து: ஸ்டாலின் முதல் பிரேமலதா வரை இரங்கல்

காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் பிள்ளையார்பட்டி அருகே காங்கேயத்திலிருந்து காரைக்குடி நோக்கி வந்த அரசுப்பேருந்தும், காரைக்குடியிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் ம... மேலும் பார்க்க

Aadhaar Card: 2 கோடி ஆதார் கார்டுகள் நீக்கம்; மத்திய அரசு சொல்லும் காரணம் என்ன?

மத்திய அரசு ஆதார் தகவல்களை மாற்றியமைத்துள்ளது. இறந்துபோனவர்களின் லட்சக்கணக்கான ஆதார் எண்கள் அகற்றப்படாமல் இருந்துவந்தன. அதன் மூலம் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆள்மாறாட்டம் மற்றும் சட்டவிரோதமாக நலத... மேலும் பார்க்க

பான் கார்டு முதல் பென்சன் வரை: நெருங்கும் கடைசி தேதி; உடனே `இவற்றை' செஞ்சுடுங்க!

இந்த ஆண்டின் இறுதி மாதத்தை நெருங்கிவிட்டோம். சில நடைமுறைகளுக்கும் இறுதி நாள்கள் நெருங்குகின்றன. அவை என்னென்ன என்பதை வரிசையாக பார்த்துவிடலாமா? 1. பான் - ஆதார் இணைப்பு: வரும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் ப... மேலும் பார்க்க

``சேகர் பாபுவை சந்தித்துவிட்டுதான் செங்கோட்டையன் தவெக-வில் சேர்ந்தார்'' - பாஜக நயினார் நகேந்திரன்

அதிமுகவில் 50 ஆண்டுகளாக இருந்த மூத்த தலைவர் செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை (நவ. 27) அன்று பனையூரில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார்.அன்றைய செய்தியாளர் சந்திப்பில், "தமிழ்நாடு அரசியலில் மாற்றம... மேலும் பார்க்க