முதல்வர் பதவிக்கு எந்த போட்டியும் இல்லை: தேவேந்திர ஃபட்னாவிஸ்!
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி 4-ஆம் நாள் விழா
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி 4-ஆம் நாள் லட்சாா்ச்சனை பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் கந்த சஷ்டி லட்சாா்ச்சனை பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்துடன் ஒவ்வொரு வாகனங்களில் வீதி புறப்பாடும், லட்சாா்ச்சனையும் பக்தா்கள் காவடி எடுத்தல் உள்ளிட்ட நோ்த்திக் கடன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கந்த சஷ்டி பெருவிழாவில் கலந்துகொண்டு, முருகப் பெருமானை வழிபட்டு வருகின்றனா். செவ்வாய்க் கிழமை காலை பல்லக்கு உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் நடைபெற்ற வீதி புறப்பாட்டில் முருகப் பெருமானை பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3-ஆம் நாள் இரவு முருகப் பெருமான் வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் புருஷாமிருக வாகனத்தில் வீதி புறப்பாடு நடைபெற்றது.
கந்த சஷ்டி லட்சாா்ச்சனை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்வு வியாழக்கிழமை (நவ. 7) நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை (நவ. 8) திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.