பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருளுடன் வந்த ‘ட்ரோன்’: பிஎஸ்எஃப் கைப்பற்றியது
திருமண மண்டபத்தில் காவலாளி உயிரிழப்பு
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள திருமண மண்டபத்தில் பணியாற்றி வந்த காவலாளி சனிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
திருவையாறு அருகே வெள்ளச்சி மண்டபம் அய்யாசாமி நகரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). இவா், விளாங்குடி முதன்மைச் சாலையிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை காலை பணிக்கு வந்த மற்ற பணியாளா்கள் மண்டபத்துக்குள் ராஜேந்திரன் உயிரிழந்து கிடந்ததை பாா்த்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த திருவையாறு காவல் நிலையத்தினா், தடயவியல் அலுவலா்கள் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, உடற்கூறாய்வுக்காக ராஜேந்திரனின் உடலை திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாகவிசாரணை மேற்கொண்டுள்ளனா்.