செய்திகள் :

திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும்; இல்லைன்னா பணிநீக்கம் - சர்ச்சை கண்டிஷனை திரும்ப பெற்ற நிறுவனம்

post image

டிசம்பர் மாதத்துக்குள் திருமணம் ஆகாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக கூறிய ஒரு சீன நிறுவனம், அந்த ரூல்ஸை திரும்ப பெற்றதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஷாண்டாங்கில் உள்ள `ஷுன்டியன் கெமிக்கல் குரூப் கோ லிமிடெட்’ என்ற நிறுவனம், 28 முதல் 58 வயதுடைய திருமணமாகாத அல்லது விவாகரத்து பெற்ற ஊழியர்களை செப்டம்பர் மாத இறுதிக்குள் `திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டுமென்று’ மே மாதம் அறிவுறுத்தியது.

மார்ச் மாதத்திற்குள் அவ்வாறு செய்ய தவறும் ஊழியர்கள், அது தொடர்பான விளக்க கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மேலும் செப்டம்பர் மாதத்துக்குள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் அவர்கள் பணிநீக்க நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியிருந்தது.

பணி நீக்கம் (Dismissal)

திருமண விகிதங்களை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை கொண்ட இந்த விதிமுறைகள் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து உள்ளூர் மனித வளம் மற்றும் சமூக பாதுகாப்பு பணியகம் பிப்ரவரி மாதம் ஒரு ஆய்வை நடத்தியது. அது பின்னர் அந்த நிறுவனம் ஓரிரு நாட்களுக்குள் அந்த கொள்கையை திரும்ப பெற்றதாகவும் திருமணம் செய்யவில்லை என்பதை காரணமாக காட்டி பணிநீக்கம் செய்யப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

அந்நிறுவனமும் தாங்கள் வெளியிட்டுள்ள அந்த அறிக்கை மற்றும் விதிமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதியளித்துள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

சீனா - தைவான் விவகாரம் : `நான் கருத்து தெரிவிக்க மாட்டேன்' - நழுவிய ட்ரம்ப்

ரஷ்யாவிடமிருந்து (சோவியத் யூனியன்) பிரிந்து சென்ற உக்ரைன் போல சீனாவிடமிருந்து பிரிந்து சென்றது தைவான். ஆனால், இன்றளவும் உக்ரைனை ரஷ்யா சொந்தம் கொண்டாடுவதுபோல தைவனை சீனா சொந்தம்கொண்டாடுகிறது. இந்த விவகா... மேலும் பார்க்க

Kumbh Mela: போனை ஆற்றில் முக்கிய மனைவி; வீடியோ காலில் புனித நீராடிய கணவர்; வைரலாகும் உபி பெண்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவிற்குப் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். சில நேரங்களில் பெண்கள் அல்லது ஆண்கள் தங்களது கணவர் அல்லது மனைவியை விட்டுவிட்டு, தான் மட்டும் செல்வதுண்டு.... மேலும் பார்க்க

கேரளா: ரயில் தீமில் கட்டப்பட்டுள்ள வீடு; இணையத்தில் வைரலாகும் வீடியோ!

சொந்த வீடு கட்டுவது என்பது பலரின் கனவாக இருக்கும். அதையும் பார்த்து பார்த்து வித்தியாசமான முறையில் கட்டிக் கொள்கிறார்கள். வீட்டின் இன்டீரியர் டிசைன் எல்லாம் பார்ப்பவர்கள் வியக்கும் அளவிற்கு டிசைன் செய... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `தேசிய கல்விக் கொள்கை விவகாரம் டு பாகிஸ்தானில் ICC தொடர்' - இந்த வார கேள்விகள்

தேசிய கல்விக் கொள்கை, டெல்லிக்கு புதிய பெண் முதல்வர், கேரளாவில் அதானி குழுமத்தின் அடுத்த ஐந்தாண்டு முதலீடு என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இந்த வார விகடன் weekly quiz-ல் உங... மேலும் பார்க்க

வெந்நீர் குளியல், தெய்வம், பாலுறவு... குரங்குகளைப் பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்!

விலங்கினங்களில் குரங்குகள் தான் மனிதர்களின் நெருங்கிய சொந்தக்காரர்கள் என்பது நமக்குத் தெரியும்.சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றாலும் சரி பைரட்ஸ் ஆஃப் தி கரீபியன் முதல் அருணாச்சலம் வரை திரைப்படங்களிலும் ... மேலும் பார்க்க

புனே: அடுக்குமாடி வீட்டில் 300 பூனைகளை வளர்த்த சகோதரிகள்... ஆய்வுக்குச் சென்று அதிர்ந்த அதிகாரிகள்!

புனே ஹடப்சர் என்ற இடத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடத்தின் 9வது மாடியில் இருக்கும் 3 படுக்கை அறை கொண்ட பிளாட்டில் வசித்து வருபவர் ரிது பரத்வாஜ். இவர் தனது சகோதரி ரிங்கு பரத்வாஜ் என்பவ... மேலும் பார்க்க