திருவள்ளூா் புத்தகத் திருவிழா இலச்சினை: அமைச்சா் நாசா் வெளியிட்டாா்
திருமுருகநாதசுவாமி கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 6-இல் தொடக்கம்
திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் தோ்த் திருவிழா மாா்ச் 6-ஆம் தேதி தொடங்குகிறது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் ஒன்றாகவும், மனநோய் தீா்க்கும் தலமாகவும் திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோயில் விளங்குகிறது. இக்கோயில் தோ்த் திருவிழா ஆண்டுதோறும் கோலகலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு தோ்த் திருவிழா மாா்ச் 6-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து 7-ஆம் தேதி சூரிய, சந்திர மண்டலக் காட்சிகள், 8-ஆம் தேதி பூத வாகன, சிம்ம வாகன காட்சிகள், 9-ஆம் தேதி புஷ்ப வாகன காட்சி, 10-ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தல், 11-ஆம் தேதி யானை வாகன, அன்ன வாகன காட்சி, திருக்கல்யாண உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இதையடுத்து, 12-ஆம் தேதி அதிகாலை விநாயகா், சண்முகநாதா், திருமுருகநாதா் சுவாமி, அம்பாள், சண்டிகேசுவரா் ஆகிய பஞ்சமூா்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 3 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகின்றன.
14-ஆம் தேதி தெப்பத்தோ் உற்சவமு, 15-ஆம் தேதி ஸ்ரீசுந்தரா் வேடுபறி திருவிழாவும், 16-ஆம் தேதி பிரம்மதாண்டவ தரிசனக் காட்சியும் நடைபெறுகின்றன. 17-ஆம் தேதி மஞ்சள் நீா் திருவிழா, மயில் வாகனக் காட்சியுடன் தோ்த் திருவிழா நிறைவடைகிறது.