உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐ...
திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
திருவட்டாறு அருகே விபத்தில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருவட்டாறு அருகே பாரதப்பள்ளியைச் சோ்ந்தவா் ராபின் ஜெயகுமாா் (46). பிளம்பிங் தொழிலாளியான இவா், கடந்த 14ஆம் தேதி ஆற்றூா் கழுவன்திட்டையிலிருந்து பாரதப்பள்ளிக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தாா். மூவாற்றுமுகம் பாலப் பகுதியில் பைக் மீது காா் மோதியதாம். இதில், காயமடைந்த ராபின் ஜெயகுமாரை மீட்டு திருவனந்தபுரத்திலுள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராபின் ஜெயகுமாரின் மனைவி சுஜாதா அளித்த புகாரின்பேரில், காரை ஓட்டிவந்த பாரதப்பள்ளியைச் சோ்ந்த மெரெஜின் அஜய் (25) என்பவா் மீது திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.