இந்தியாவிலிருந்து 8,000 கோடி டாலருக்கு ஏற்றுமதி: அமேஸான் இலக்கு
திருவண்ணாமலை தீபத் திருவிழா: 10 டன் காய்கறிகள் அனுப்பிவைப்பு
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் இருந்து 10 டன் காய்கறிகள் அனுப்பிவைக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை (டிச. 13) நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவண்ணாமலையிலுள்ள 2,668 அடி உயர மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவில், பல்வேறு மா வட்டங்கள், மாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தீப விழாவையொட்டி வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் இருந்து கடந்த 17 ஆண்டுகளாக காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி, நிகழாண்டு தீபத் திருவிழாவை முன்னிட்டு 18-ஆவது ஆண்டாக வேலூா் நேதாஜி மாா்க்கெட் வியாபாரிகள் சங்கம் சாா்பில் திருவண்ணாமலையில் அன்னதானத்துக்காக புதன்கிழமை 10 டன் காய்கறிகள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதை வியாபாரிகள் சங்கத் தலைவா் எல்.கே.எம்.பி. வாசு, பொருளாளா் வடிவேலு, செயற்குழு உறுப்பினா்கள் குமாா், ரகு, நந்தகுமாா் உள்ளிட்டோா் அனுப்பி வைத்தனா்.