செய்திகள் :

திருவண்ணாமலை தீபம்: சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்- அமைச்சர் சேகர்பாபு

post image

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ எனவும்,பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிடுவார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கம் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் அருள்மிகு பெரியாண்டவருக்கு 12 கிலோ எடையில் உபயதாரர் நிதியில் இருந்து உருவாக்கப்பட்ட வெள்ளிக் கவசத்தை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்துகொண்டு 12 கிலோ எடையிலான வெள்ளி கவசம் தூத்துக்குடி மாவட்டம் தேரிக்குடியிருப்பு பகுதியில் உள்ள அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலுக்கு வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உபயதாரர்களின் பங்களிப்பு பெருமளவு திருக்கோவிலுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் வழங்கப்படும் நிதிகள் அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப திருக்கோவில்களுக்கு திருப்பணிக்கும் பயன்படுவதால் அதிக அளவு உபயதாரர்கள் திருக்கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

முதல்வர் பொறுப்பேற்ற பிறகுதான் அதிகளவில் கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. இதுவரை 2350 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ.1 கோடி மதிப்பிலான வைர கிரீடம் ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு உபயதாரர்களால் வழங்கப்பட உள்ளது. இதுவரை 10,000 மேற்பட்ட கோயில்கள் திருப்பணிக்காக மாநில வல்லுநர் குழுவால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

33 ஆண்டுகளுக்கு பின் நெல்லையப்பர் கோவிலுக்கு 100 கிலோ வெள்ளியை சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த மூன்றரை ஆண்டு காலத்தில் இந்து சமய அறநிலைத்துறையில் நடைபெற்ற சாதனைப் போல் வேறு எந்த ஆட்சி காலத்திலும் நடைபெறவில்லை.

இதையும் படிக்க |பாரதி பிறந்த நாள்: எட்டயபுரத்தில் தினமணி சார்பில் மரியாதை

எட்டுக்கால் பாய்ச்சலில் அறநிலையத்துறை

எட்டுக்கால் பாய்ச்சலில் அறநிலையத்துறை செயல்படுவதால் இறை பக்தர்கள் ஆட்சியை பாராட்டுகிறார்கள். இதுவரை ரூ.909 கோடி உபயதாரர்கள் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளனர்.

வருகிற திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு காலையில் ஏற்றப்படும் பரணி தீபத்திற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள், உபயதாரர்கள், துறை பணியாளர்கள் உள்பட 6600 நபர்களை அனுமதிக்கப்பட உள்ளனர்.

மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு கோவிலை சுற்றி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள், உபயதாரர்கள், துறை பணியாளர்கள் உள்பட 11600 நபர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

திருவண்ணாமலை மலையில் அதிக அளவில் மக்களை ஏற்றக்கூடாது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை தீபத்திற்கு பக்தர்கள் மலை மீது ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிடுவார். அறிக்கையின்படி மலையில் தீபம் ஏற்ற தேவையான அளவு மனிதர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு சிறப்பு அனுமதி சீட்டு இல்லாமல் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்‌ என தெரிவித்தார்.

கனமழையால் ஸ்தம்பித்த சென்னை! நெரிசலில் சிக்கிய வாகனங்கள்!

சென்னையில் பெய்த கனமழையால் போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் வாகனங்கள் சிக்கியது.வங்கக்கடலில் உருவாக்கியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை புறநகர்ப் பகுதிகளில... மேலும் பார்க்க

தீவிரமடையும் மழை... சென்னை நோக்கி வரும் மேகக்கூட்டங்கள்!

சென்னையில் இன்று காலை சில மணி நேரம் கனமழை பெய்த நிலையில், அடுத்த சுற்று மழை தொடங்கவுள்ளதாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் தெரிவித்துள்ளார்.நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகு... மேலும் பார்க்க

உணவு, குடிநீரின்றி 65,000க்கும் மேற்பட்டோர் தவிப்பு: ஐ.நா.

காஸா: காஸாவின் வடக்கு பகுதியினுள் வெளியிலிருந்து நுழையும் மனிதாபிமான உதவிகள் அனைத்தும் இஸ்ரேல் ராணுவத்தினால் தடுக்கப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான காஸா மக்கள் அத்தியாவசிய உதவிகளின்றி தவிப்பதாக ஐக்கிய ந... மேலும் பார்க்க

மோசமான வானிலை: சென்னையில் 13 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையில் புதன்கிழமை காலை முதல் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, 13 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்த... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விவசாயிகள் சாலை மறியல் - ஆட்சியரகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட நெல், கரும்பு பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் முன்பு புதன்கிழமை விவசாயிகள் சாலை மறியல், ஆட்ச... மேலும் பார்க்க