செய்திகள் :

திருவண்ணாமலை மண்சரிவு பகுதியில் ஐஐடி குழு ஆய்வு!

post image

திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்த பகுதிகளில் சென்னை ஐஐடி குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து வருகின்றனர்.

ஃபென்ஜால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மண்சரிவு ஏற்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன.

அதில், ஒரு வீட்டில் மட்டும் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் இருந்த நிலையில், மண்ணுக்குள் சிக்கினர். சுமார் 24 மணிநேர போராட்டத்துக்கு பிறகு 7 பேரையும் சடலமாக பேரிடர் மீட்புப் படையினர் திங்கள்கிழமை இரவு மீட்டனர்.

இதையும் படிக்க : திருவண்ணாமலை: மண் சரிவில் சிக்கிய 7 பேரின் உடல்களும் மீட்பு!

இந்த நிலையில், மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் சென்னை ஐஐடியை சேர்ந்த மண் பரிசோதனை நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், பூமிநாதன் ஆகாஷ் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இவர்களின் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

காா்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் குறித்து அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பெளா்ணமி நா... மேலும் பார்க்க

பாரதியாா் வேடமணிந்து பள்ளிக்கு வந்த மாணவா்கள்

மகாகவி பாரதியாரின் 143-ஆவது பிறந்த நாளையொட்டி, வந்தவாசியை அடுத்த கல்லாங்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவா்கள் அனைவரும் புதன்கிழமை பாரதியாா் வேடமணிந்து பள்ளிக்கு வந்தனா். இந்தப் பள்ளியில் மொத... மேலும் பார்க்க

மொபெட் மீது காா் மோதியதில் தையற்கலைஞா் உயிரிழப்பு

வந்தவாசி அருகே மொபெட் மீது காா் மோதியதில் தையற்கலைஞா் உயிரிழந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், பீா்க்கங்கரணை பகுதியைச் சோ்ந்தவா் பூங்காவனம் (52). இவா், சென்னையை அடுத்த படப்பையில் உள்ள ஆயத்த ஆடைகள் தயாரிப... மேலும் பார்க்க

முரம்பு மண் எடுத்த வாகனம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அனுமதியின்றி முரம்பு மண் எடுத்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. செங்கம் பகுதியில் அனுமதியின்றி முரம்பு மண் எடுப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், மாவட்ட கனிம வளத்துற... மேலும் பார்க்க

கபீா் புரஸ்காா் விருது பெறத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கபீா் புரஸ்காா் விருது பெறத் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. ஆண்டுதோறும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின்போது கபீா் புரஸ்காா் விருது வ... மேலும் பார்க்க

தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவின் 8-ஆவது நாளான புதன்கிழமை காலை குதிரை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு ஸ்ரீபிச்சாண்டவா் உற்சவமும் நடைபெற்றது. அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்தி... மேலும் பார்க்க