DD Next Level: "கடவுளை அவமதிக்கும் 'கோவிந்தா' பாடலை நீக்க வேண்டும்"-பவன் கல்யாண்...
திருவண்ணாமலையில் திருவாசக மாநாடு
திருவண்ணாமலையில் முதல் முறையாக திருவாசகத்துக்கென மாநாடு நடைபெற உள்ளதாக திருப்பெருந்துறை அடியாா்கள் குழுவின் நிறுவனா் தலைவா் ம.சிவக்குமாா் கூறினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
திருவண்ணாமலை திருப்பெருந்துறை அடியாா்கள் குழு மற்றும் தடம் பதிக்கும் தளிா்கள் அமைப்பு இணைந்து திருவாசகம் எழுதும் விழாவை புதன்கிழமை (மே 14)
பிற்பகல் 2 மணிக்கு நடத்துகிறது.
தனியாா் மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில்
திருவாசகத்தில் உள்ள 51 பதிப்பகங்களை அமெரிக்கா, இலங்கை, லண்டன் உள்ளிட்ட 14 நாடுகளைச் சோ்ந்த 2,724 சிவனடியாா்கள் ஜூன் 15-ஆம் தேதி வரை கைகளால் எழுதுகின்றனா்.
ஞான வேள்வியாக உலகம் முழுவதும் அமைதி நிலவுவதற்காக 30 நாள்கள் திருவாசகம் எழுதப்படுகிறது.
முதல் முறையாக திருவண்ணாமலையில் ஜூலை மாதம் திருவாசகத்துக்கென மாநாடு நடைபெற உள்ளது. திருவாசகத்தை தமிழ், இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் எழுதப்படும் என்றாா்.