திருவண்ணாமலையில் பாஜக அலுவலகம் திறப்பு
திருவண்ணாமலை -அவலூா்பேட்டை சாலையில் புதிகாக கட்டப்பட்ட மாவட்ட பாஜக அலுவலகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த அலுவலகத்தை, கோவையில் இருந்தபடியே காணொலி மூலம் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித்ஷா திறந்து வைத்தாா்.
இதையடுத்து, திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா்.
தேசிய பொதுக்குழு உறுப்பினா் டி.பாலகிருஷ்ணன் (ஒசூா்), பாஜக அலுவலக கட்டடக் குழு உறுப்பினா் அன்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.
பாஜகவின் மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், மாநில பொதுச் செயலா் பி.காா்த்தியாயினி, வேலூா் பெருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் டி.எஸ்.குணசேகரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு புதிய பாஜக அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை கட்சியினா் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.
இந்த நிகழ்வில், மாவட்டத் தலைவா்கள் கவிதா (திருவண்ணாமலை வடக்கு), தசரதன் (வேலூா்), தருமராஜ் (விழுப்புரம்), ஆனந்தன் (ராணிப்பேட்டை), பாலசுந்தரம் (கள்ளக்குறிச்சி), திருவண்ணாமலை தெற்கு மாவட்ட முன்னாள் தலைவா் கே.என்.நேரு உள்பட பலா் கலந்து கொண்டனா்.